Breaking News Live: நீட் விலக்கு கோரி அமித்ஷாவுடன் தமிழ்நாடு குழு சந்திப்பு
இன்றறைய தினத்தின் முக்கிய அரசியல், சமூக, நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
குடியரசு தின விழா ஊர்திகள் அணிவகுப்பில் தமிழ்நாட்டின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: திண்டுக்கலை சேர்ந்த ரேணுகா தேவியின் மாடு பிடிபடாமல் போன் பரிசாக வென்றது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்திக்கிற்கு கார் பரிசு
Background
பஞ்சாப் மாநிலத்தில் ஸ்ரீகுருரவிதாஸ் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிக்கு பதிலாக பஞ்சாப் தேர்தல் வரும் பிப்ரவரி 20-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாட்டில் பஞ்சாப், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், கோவா உள்பட 5 மாநிலங்களுக்கு அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், உத்தரபிரதேச மாநில சட்டசபை அளவிற்கு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தல். பஞ்சாபில் மொத்தம் உள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 14-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -