“தொடர்ந்து கண்காணிப்பேன்.. சிறு தவறென்றாலும் நடவடிக்கை” - கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்..!
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
ABP NADULast Updated: 06 Mar 2022 08:44 PM
Background
தமிழ்நாட்டில் வடக்கு கடலோரத்தில் இருந்து 300 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதனால் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ...More
“தொடர்ந்து கண்காணிப்பேன்.. சிறு தவறென்றாலும் நடவடிக்கை” - கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்..!
மேயர் என்பது பதவியல்ல மேயர் என்பது பொறுப்பு.
உள்ளாட்சியை நான் கண்காணித்து கொண்டே இருப்பேன். கண்காணிப்பது மட்டுமல்ல எங்காவது சிறு தவறு நடந்தாலும் உறுதியாக நடவடிக்கை எடுப்பேன். இது அச்சுறுத்துவதற்கால அல்ல.
மக்கள் நம்மை நம்பி நமக்கு இந்தப் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள். அந்த மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக.
தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 770 நபர்களுக்கு கொரோனா சிகிச்சை
தமிழ்நாட்டில் இன்று புதியதாக 196 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய நிலவரப்படி 2 ஆயிரத்து 770 நபர்கள் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு விகிதம் 0.4 சதவீதமாக பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று கொரோனா வைரசால் புதியதாக 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 13 ஆக அதிகரித்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் கபில்தேவை முந்தினார் அஸ்வின். 435 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் கபில்தேவை முந்தி 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு செல்வதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
கடலூர் எம்.எல்.ஏ அய்யப்பனை திமுக கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திமுக சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.
ரூ.15 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனை - பபாசி தகவல்
சென்னை 45ஆவது புத்தகக் கண்காட்சியில் ரூ.15 கோடிக்கும் மேற்பட்ட புத்தக விற்பனை நடைபெற்றுள்ளது. 8 லட்சம் மாணவர்கள் உள்ளிட்ட 15 லட்சம் பேர் இதுவரை புத்தகக் கண்காட்சிக்கு பார்வையாளர்களாக வந்துள்ளனர். அம்பேத்கர், பெரியார் புத்தகங்களும், ஆன்மிகம், வரலாறு புத்தகங்களும் அதிகளவில் விற்பனை - பபாசி தகவல்
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44.54 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44.54 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 44,54,28,119 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 450 கிலோ கஞ்சா பறிமுதல்...
தூத்துக்குடி தாளமுத்து நகர் அடுத்த வெள்ளப்பட்டி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தி கொண்டு செல்ல முயன்ற சுமார் 450 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்த முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டTata Ace வாகனம், மூன்று பைக்குகளும், 9 செல்போன் உள்ளிட்டவைகளை க்யூ பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.