News Today LIVE: லக்கிம்பூர் வன்முறை - தானே விசாரணைக்கு எடுத்தது உச்சநீதிமன்றம்

News Today LIVE in Tamil: தமிழ்நாடு, இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 06 Oct 2021 09:30 PM
லக்கிம்பூர் வன்முறை - தானே விசாரணைக்கு எடுத்தது உச்சநீதிமன்றம்

லக்கிம்பூர் வன்முறை - தானே விசாரணைக்கு எடுத்தது உச்சநீதிமன்றம் நாளை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை

வேதியியல் துறையில் சிறந்த ஆராய்ச்சிக்காக 2 பேருக்கு நோபல் பரிசு

வேதியியல் துறையில் சிறந்த ஆராய்ச்சிக்காக 2 பேருக்கு நோபல் பரிசு - ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பெக்மில்லுக்கு நோபல்

லக்கிம்பூர் செல்ல அனுமதி ராகுல் காந்திக்கு அனுமதி

பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் லக்கிம்பூர் செல்ல உத்தரபிரதேச அரசு அனுமதி வழங்கியது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா காந்தி ராகுல் காந்தி உள்ளிட்டோர் லக்கிம்பூர் செல்ல அனுமதி வழங்கியது உத்தரபிரதேச அரசு

பிரியங்கா காந்தி ராகுல் காந்தி உள்ளிட்டோர் லக்கிம்பூர் செல்ல அனுமதி வழங்கியது உத்தரபிரதேச அரசு


 




கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க செல்பவர்களை தடுக்கிறார்கள். இன்று நான் போகிறேன் முடிந்ததை செய்யட்டும் என ராகுல் காந்தி சற்று நேரத்திற்கு முன்பு பேசியிருந்தார்

புலம்பெயர் தமிழர் நல வாரியம் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நலவாரியம் தோற்றுவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேரைக் கொண்டு புதிய வாரியம் அமைக்கப்படும் என்றும், புதிய வாரியத்துக்காக மூலதன செலவினமாக ரூ.1.40 கோடி ஒதுக்கப்படும் என்றும், நலத்திட்டம், நிர்வாக செலவினங்களுக்கு தொடர் செலவினமாக ஆண்டுதோறும் ரூ.3 கோடி ஒதுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், வேலூர், ராணிப்பேட்டை, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 10ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் ஒரேநாளில் 18,833 பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரேநாளில் 18,833 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 24,770 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Background

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையம் கேஸ் சிலிண்டரின் விலை 15 ரூபாய் அதிகரித்து 915 ரூபாய் ஆனது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி வணிக சிலிண்டரின் விலை அதிகரித்த நிலையில் தற்போது வீட்டு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ஏற்கெனவே அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை, சமையல் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிலிண்டர் விலை மீண்டும் 15 ரூபாய் விலை உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் சம்பளத்தில் பெரும்பான்மையான தொகை சமையல் சிலிண்டருக்கே வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டரின் விலை மாற்றம் செய்யப்படுகின்றன. பெட்ரோல் டீசல் விலைகளை எண்ணெய் நிறுனங்கள் தினசரி மாற்றி அமைப்பது வழக்கம். ஆனால் சமையல் எரிவாயு விலை மாதத்துக்கு இருமுறை மட்டுமே மாற்றி அமைக்கப்படுகின்றன. சில நேரங்களில்  3 முறை கூட மாற்றி அமைக்கப்படுகின்றன.இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 700 ரூபாயாக இருந்த சிலிண்டரின் விலை செப்டம்பர் மாதத்தி்ல் 875.50 ரூபாய்க்கு  விற்கப்பட்டது. அதே மாதத்தில் மீண்டும் விலை உயர்த்தப்பட்டு 900 ரூபாய்க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலை 300 ரூபாய் அதிகரித்துள்ளது.




பிப்ரவரி மாதத்தில் மூன்று முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் இரண்டு முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்தே பொதுமக்கள் இதுவரை வெளியில் வராத நிலையில் அக்டோபர் 6ஆம் தேதியான இன்று  தற்போது  மீண்டும்  சிலிண்டர் விலை 15 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் சமையல் சிலிண்டர் விலை ரூ. 915.50ஆக விற்பனை செய்யப்படவுள்ளது.






 



- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.