News Today LIVE: காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் 3 மணி நேரத்துக்கு மழை
News Today LIVE in Tamil: தமிழ்நாடு, இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
இந்தியாவில் ஒரேநாளில் 18,346 பேருக்கு கொரோனா கண்டறிப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளாது. 209 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
Background
நேற்று, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகிய சமூக வலைதளங்கள் முடங்கின. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான மெசேஜிங் ஆப்பான வாட்சப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் தற்காலிகமாக முடங்கியதால் பயனர்கள் குழப்பத்திலும், தவிப்பிலும் ஆழ்ந்தனர்.
6 மணிநேரம் கழித்து மீண்டும் இயங்கியது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப்.. தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பதிவு செய்துள்ள ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், “மன்னிக்கவும், இந்த சேவைகளை நீங்கள் எவ்வளவு சார்ந்திருக்கிறீர்கள் என தெரியும். இப்போது ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்சப் மீண்டும் இயங்கத் தொடங்கியது” என பதிவிட்டுள்ளார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -