News Today LIVE: உபி வன்முறை - 8 பேர் உயிரிழப்பு?

News Today LIVE in Tamil: தமிழ்நாடு, இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

Continues below advertisement

LIVE

Background

News Today LIVE in Tamil:

தமிழகத்தில் நாளை (03-10-2021) நான்காம் கட்ட சிறப்பு கொரோனா தடுப்பூசி நடைபெறும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.   

கோவிட்-19க்கான 4வது மாபெரும் தடுப்பூசி முகாம், உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவிடன் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்து. இருப்பினும், தடுப்பூசி போடும் பணி  தொய்வின்றி நடைபெற வேண்டும் என்பதற்காகவும், உள்ளாட்சி அமைப்புகளும், சுகாதாரப் பணியாளர்களும் தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததாலும், நான்காவது சிறப்பு தடுப்பூசி முகாம்களை நாளைய (இன்று) தினத்தில் நடத்த தமிழ்நாடு அரசு முன்வந்தது.       

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 3 முகாம்களிலும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதற்கு மக்கள் அதிக ஆர்வத்துடன் வந்ததாகவும், இதனையடுத்து, 4வது முகாம் மிகப் பெரிய அளவில் நடத்தப்படுகிறது" என்று கூறினார். 

தமிழகம் முழுவதும் மாபெரும் முதல் கட்ட தடுப்பூசி முகாம் செப்டம்பர் 12ம் தேதியன்றும், இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம் செப்டம்பர் 19ம் தேதியன்றும், மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாம் செப்டம்பர் 26ம் தேதியன்றும் நடைபெற்றது. செப்டம்பர் மாதத்தில், இந்த மூன்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதன் மூலம் 1 கோடியே 42 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட மாதம் வரை மாநிலத்தில் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசியின் எண்ணிக்கை 3.05 கோடியாக உள்ளது. 

மகாராஷ்டிரா, ஆந்திரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட  மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. உதாரணமாக, மகாராஷ்டிராவில் 2.4 கோடி பேருக்கு கொரோனா இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் இந்த் எண்ணிக்கை 1.1 கோடியாக உள்ளது. தமிழ்நாட்டுக்கு தேவையான அளவு   தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யாததே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. 

அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. எல்லையோரத்தில் உள்ள மாவட்டங்களில் தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, கேரள எல்லையில் உள்ள கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொய்வின்றி நடத்தப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது.  

Continues below advertisement
22:28 PM (IST)  •  03 Oct 2021

உபி வன்முறை - 8 பேர் உயிரிழப்பு?

உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை - 8 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தகவல் 

16:14 PM (IST)  •  03 Oct 2021

20 மணி நேர விசாரணைக்கு பிறகு கைது

சுமார் 20 மணி நேர விசாரணைக்கு பிறகு ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளார்

16:10 PM (IST)  •  03 Oct 2021

போதைப்பொருள் விவகாரம் - ஷாருக்கான் மகன் கைது

சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஷாருக்கான் மகன்  கைது செய்யப்பட்டார்

14:33 PM (IST)  •  03 Oct 2021

58832 வாக்குகள் அதிகம் பெற்று மம்தா வெற்றி

பாஜக வேட்பாளர் பிரியங்காவை விட 58832 வாக்குகள் அதிகம் பெற்று மம்தா வெற்றி

14:30 PM (IST)  •  03 Oct 2021

பபானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி

பபானிபூர்  தொகுதி இடைத்தேர்தலில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றி

14:14 PM (IST)  •  03 Oct 2021

பபானிபூர் தேர்தல் முடிவுகள்: 55,000 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார் மம்தா பானர்ஜி..!

பபானிபூர் தேர்தல் முடிவுகள்: 55,000 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார் மம்தா பானர்ஜி. 17000 வாக்குகள் மட்டுமே பெற்று பாஜக இரண்டாவது இடத்தில் பின்தங்குகிறது

12:45 PM (IST)  •  03 Oct 2021

பபானிபூர் தேர்தல் : 34,000 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார் மம்தா பானர்ஜி..

பபானிபூர் தேர்தல் : 34,000 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார் மம்தா பானர்ஜி. பாஜக பின்னடைவைச் சந்தித்த அதே வேளையில், சிபிஎம், 343 வாக்குகள் மட்டும் பெற்றுள்ளது

11:57 AM (IST)  •  03 Oct 2021

பபானிபூர் தேர்தல் முடிவுகள்: 28,000 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார் மம்தா பானர்ஜி..!

பபானிபூர் தேர்தல் முடிவுகள்: 28,000 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார் மம்தா பானர்ஜி..!

11:11 AM (IST)  •  03 Oct 2021

Bhabanipur Election Result: பபானிபூர் தேர்தல்: 9974 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார் மம்தா பானர்ஜி

பபானிபூர் தேர்தல்: 9974 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார் மம்தா பானர்ஜி

பாஜக - 3828

சிபிஎம் - 250

11:11 AM (IST)  •  03 Oct 2021

Bhabanipur Election Result 2021: தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மம்தா பானர்ஜி முன்னிலை..

பபானிபூர் தேர்தல்: தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மம்தா பானர்ஜி முன்னிலை..

08:19 AM (IST)  •  03 Oct 2021

பவானிபூரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது - மம்தா வெற்றி பெறுவாரா?

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மம்தா, பாஜகவின் பிரியங்கா டிப்ரேவால் இடையே போட்டி நிலவி வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியுற்றார்.

11:12 AM (IST)  •  03 Oct 2021

Covid 19 Vaccine: நான்காம் கட்ட மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கியது

தமிழ்நாடு முழுவதும் நான்காம் கட்ட மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறப்பு முகாம்களில் சுமார் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.