• Tamil News Headlines Today:   

  • ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ஹைத்ரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர்  அப்பாவு தெரிவித்துள்ளார்.

  • இந்தியாவில் அணுக்கழிவுகளை புதைத்து வைக்கும் ஆழ்நிலக் கழிவு மையம் அமைப்பதற்கான அவசியம் தற்போது இல்லை என அணுசக்தித் துறை கடந்த ஆண்டு எனக்களித்த பதிலில் கூறியிருந்தது.இது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கே எதிரானதாகும் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்தார்.  

  • கொரோனா பேரிடர் தமிழ்நாட்டில் ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து வருகின்ற 4 அக்டோபர் 2021 முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்லூரி திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.  

  •                                                                  

  • உடனடியாக, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களான குலாம்நபி ஆசாத், கபில் சிபல் தெரிவித்துள்ளார்.  

  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,53,327 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,612 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 183 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 24 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,574 ஆக உயர்ந்துள்ளது.  

  • கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறியது தொடர்பாக நேற்று 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 180 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், முகக்கவசம் அணியாத 2 ஆயிரத்து 180 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை பெருநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.



  • ராஜஸ்தானில் நான்கு மாவட்ட மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் & தொழில்நுட்ப நிறுவனம் (சிபெட்) ஜெய்பூர் ஆகியவற்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 

  • நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் 23,529 புதிய தொற்று பாதிப்புகள் காணப்படுகின்றன. 28,718 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,77,020 ஆக குறைந்துள்ளது. 

  • பன்னிரண்டு பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் ஆட்சேர்ப்பு (clerical recruitments) மற்றும் இனிமேல் விளம்பரப்படுத்தப்படும் காலியிடங்களுக்கான தொடக்க மற்றும் முக்கிய தேர்வுகளை, ஆங்கிலம் மற்றும் இந்தியுடன் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய அரசின் நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.