Breaking news LIVE: பருவமழை - சென்னையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்
Tamil Nadu Rain News Today LIVE: தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.
பருவமழையை முன்னிட்டு சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. ஆழ்வார்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாமை நாளை காலை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. வடக்கு தமிழ்நாட்டிற்கும் தெற்கு ஆந்திராவுக்கும் இடையே மாலை 5.30 மணி முதல் 8.30 மணிக்குள் சென்னை அருகே கரையைக் கடக்கும்.
சென்னையிலும், புறநகர்ப்பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது
தி.நகர், ராயபுரம், ராயப்பேட்டை, திருவான்மியூர், சைதாப்பேட்டை, அரும்பாக்கம், அமைந்தகரை, வடபழனி, நந்தனம்,நுங்கம்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் கடுமையாக பெய்து வருகிறது கனமழை
சென்னையில் கடந்த 16 மணிநேரத்திற்கும் மேலாக பல்வேறு இடங்களிலும் கனமழை தொடர்ந்து பெய்கிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்றும், இன்றிரவு முதல் நாளை காலை வரை கனமழை பெய்யக்கூடும் எனவும், கடலூர், புதுச்சேரிக்கு அதிகனமழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறினார்.
சென்னையில் நாளை காலை 8.30 மணிக்குள் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்றும் நாளையும் சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 4 விமானங்கள், சென்னைக்கு வர இருந்த 4 விமானங்கல் என மொத்தம் 8 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மாலை கடலூர் அருகே கரையைக் கடக்கிறது தாழ்வு மண்டலம் - காரைக்கால் - ஸ்ரீஹரிஹோட்டோ இடையே கரையைக் கடக்கும்
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை, நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
திருவாரூர். நாகை மாவட்டத்தை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை, நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தென்காசி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமுதா ஐ.ஏ.எஸ், கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட 4 அதிகாரிகள் நியமனம்.
நவம்பர் 9,10,11 ஆகிய தேதிகளில் அதிகனமழை பெய்யும் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியை விட இப்போது சிறப்பாக பணியாற்றி வருகிறோம் என்றும் கூறினார்.
கடந்த அக்டோபர் 29ஆம் தேதி முல்லை பெரியாறு அணை நடைமுறைகள் விதிகளின் படி தமிழக நீர்வளத்துறை அலுவலர்களாலேயே திறக்கப்பட்டது. அந்த நேரத்தில் கேரள நீர்வளத்துறை அமைச்சர் அணையை பார்வையிட்டார். அணை கேரள அமைச்சரின் உத்தரவின்பேரில் திறக்கப்பட்டதாக சர்ச்சை நீடித்து வரும் நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை
தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய தேதிகளில் அதிதீவிர மழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
சென்னை சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் மதியம் 2.30க்கு பதில் மாலை 4 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் கனமழை - செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வுமையம்
தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - அடுத்த 5 நாட்களுக்கு மிகக் கனமழை இருக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
கொடைக்கானல் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று மாலை 2,095 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 710 கன அடியாக குறைந்தது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு
சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எதிரொலி - அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
கனமழை எதிரொலி - அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
Background
Tamil Nadu Latest News LIVE
வடகிழக்கு பருவமழை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார். நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துரைத்த முதல்வர், தமிழகத்தின் மாநிலப் பேரிடர் நிதியானது கொரோனா நிவாரணப் பணிகளுக்கும், இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கும் செலவு செய்யப்பட்டுள்ளதால், தேசிய பேரிடர் நிதியில் இருந்து போதிய நிதியினை ஒதுக்கீடு செய்துதர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -