News Today LIVE: இரண்டு அடுக்காக அமையும் மதுரவாயல் சாலை
News Today LIVE in Tamil: தமிழ்நாடு, இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.
மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை முதன்முறையாக இரண்டு அடுக்காக அமையவுள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை 3 மாதங்களில் நிறைவடையும். எந்த இடத்தில் அணுகு சாலைகள் அமைக்க வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். முதல் தளத்தில் வாகனங்கள், இரண்டாம் தளத்தில் கண்டெய்னர் செல்லும் வகையில் சாலை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவுடிகளை ஒடுக்குவதில் ஜெயலலிதாவை போல முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுவது வரவேற்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 2 பேர் குற்றவாளி; தண்டனை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் - சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்திரகுமாரி 1991-96 வரை சமூக நல அமைச்சராக இருந்தபோது ரூ.15.45 லட்சம் ஊழல் செய்ததாக புகார்
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதுமுள்ள கிறிஸ்துவ சமூகத்தின் முக்கியஸ்தர்களுடன் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி புது தில்லியில் நேற்று உரையாடினார்
ஆத்திகர்கள் மற்றும் நாத்திகர்கள் இணைந்து வாழும் ஒரு நாட்டில் கட்டாய மத மாற்றமானது எந்தவொரு மதத்தின் விரிவாக்கம் மற்றும் நம்பிக்கைக்கான சான்றாக இருக்க முடியாது என்று தெரிவித்தார்.
உலகின் அனைத்து மதங்களையும் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்வதாகவும், அரசியலமைப்பு மற்றும் சமூக உத்தரவாதம், அவர்களின் மத, சமூக, பொருளாதார, கல்வி உரிமைகளின் பாதுகாப்பு ஆகியவை "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நமது வலிமையின் அழகு என்றும் கூறினார்.
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 87 கோடியைக் கடந்துள்ளதாக (மொத்தம் 84,62,957 முகாம்களில் 87,07,08,636 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன) மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா தலத்திற்கு இந்த வாரம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் முன்பதிவு செய்யலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் www.combatorewilderness.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாவிற்கு அனுமதி வழங்கப்படுமெனவும், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பெரியவர்களுக்கு 550 ரூபாயும், 5 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 450 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Background
Today News in Tamil LIVE:
பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து, ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டியிலும் மோதல் போக்கு காணப்படுகிறது. இருப்பினும், மூத்த காங்கிரஸ் தலைவரும், அம்மாநிலத்தின் முதல்வருமான அசோக் கெலாட்-க்கு 100க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பஞ்சாப் முதலமைச்சராக பதவி வகித்து வந்த அமரீந்தர் சிங் அண்மையில் பதவி விலகியதைத் தொடர்ந்து சரண்ஜீத் சிங் சன்னி புதிய முதலமைச்சராக பதவியேற்றார். புதிதாக 15 பேர் அமைச்சர்களாக கடந்த ஞாயிற்றுக் கிழமை பதவியேற்றனர். இந்நிலையில் அவர்களுக்கான இலாக பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சித்து ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப்-ல் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், ராஜஸ்தானிலும் எதிரொலிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -