Breaking News LIVE : திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
TNPSC தேர்வில், தமிழ் பாட தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே பிற தாள்களை மதிப்பீடு செய்யும் நடைமுறை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. முதல்வரின் பார்வைக்கு பிறகு விரைவில் ஒப்புதல் வழங்கப்பட வாய்ப்பு
பேரறிவாளனுக்கு 5-வது முறையாக பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
எஸ்பி பாலசுப்ரமணியம் முதலாம் ஆண்டு நினைவு நாளை திரை இசை கலைஞர்கள் சங்கம் மற்றும் அறக்கட்டளை சார்பாக நடத்தப்படுகிறது. இதில் இசைஞானி இளையராஜா மற்றும் பின்னனி பாடகர் சுரேந்தர், தினா, செல்வமணி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
தமிழ்நாட்டில் கடந்த 36 மணி நேரத்தில் மொத்தம் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் 733 ரவுடிகள் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வறுமை ஒழிப்புக்கான சர்வதேச அமைப்பான குளோபல் சிட்டிசன் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள குளோபல் சிட்டிசன் லைவ் என்ற நிகழ்ச்சியில் வீடியோ மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார்.
தமிழ்நாடு மக்களுக்கு கொடுத்த பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனை ஏதோ ஆரம்ப வேகம் என்று நினைக்க வேண்டாம்; எப்போதும் இப்படித்தான் இருப்போம். எல்லா நாளும் இப்படித்தான் செயல்படுவோம். இப்போது அறிவித்ததுபோல மூன்று மாதத்திற்கு ஒருமுறை நானே உங்களிடம் இதைச் சொல்வேன். நிறைவேற்றிய வாக்குறுதிகளை நானே உங்களுக்கு பட்டியல் போட்டுக் காண்பிப்பேன். வாக்களித்த மக்களை ஐந்து ஆண்டுகள் கழித்துத்தானே பார்க்கப் போகிறோம் என்று அலட்சியமாக இருப்பவன் இல்லை நான். என்னை இயக்கிக் கொண்டு இருப்பது மக்களாகிய நீங்களும் எனது மனசாட்சியும்தான்!நீங்கள் உத்தரவிடுங்கள்! உங்களுக்காகவே உழைக்கக் காத்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
ஃபோர்ட் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அனுராக் மல்ஹோத்ரா பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக போர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் உற்பத்தி இயக்குநராக இருக்கும் பாலசுந்தரம் ராதாகிருஷ்ணன் புதிய தலமைமை செயல் அதிகாரியாக, வரும் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் செயல்படுவார் எனவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலசுந்தரம் ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் இடைக்கால பணிகளையும் மேற்கொள்வார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் 29,616 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 28,046 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,28,48,273 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.78% ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 2020 முதல் அதிகபட்சம்.
இந்தியாவில் தற்போது கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,01,442 ஆக உள்ளது; தற்போது, மொத்த பாதிப்புகளில் 1% க்கும் குறைவானவர்கள் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர் (தற்போது 0.90%).
இன்று அபுதாபியில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் டெல்லி அணி – ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் ஹைதராபாத் அணி – பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
இன்று அபுதாபியில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் டெல்லி அணி – ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் ஹைதராபாத் அணி – பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாக இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு பாகிஸ்தானால் ‘குலாப்’ என பெயரிடப்பட்டுள்ளது. வடமேற்கு திசையில் நகரும் புயல், ஒடிஷா - ஆந்திரா இடையே நாளை மாலை கரையைக் கடக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாஷிங்டன் டிசி நகரில் குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் சுஹா யோஷுஹூடேவை சந்தித்து பேசினார்
மும்பை-அகமதாபாத் அதிவிரைவு ரெயில் (MAHSR) திட்டத்தை சிக்கல் இல்லாமல் சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு உதவும் வகையில் முயற்சிகளை விரைவுபடுத்துவது குறித்து பேச்சு விவாதித்தனர்
அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று வெள்ளை மாளிகையில், அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச்சு நடத்தினார்.
Background
Latest Breaking News in Tamil LIVE
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 31,382 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், 32,542 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும், தொற்று இன்னும் உள்ளதால், இது மற்றொரு அலைக்கு வழிவகுக்கலாம் என மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்தார். பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை பரப்ப, நேற்று, ரேடியோ நிலையங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -