News Today LIVE: பொங்கல் பண்டிகையை ஒட்டி இயக்கப்பட்ட பேருந்துகள்.. போக்குவரத்துக்கழகத்துக்கு ரூ.138 கோடி வருவாய் - தமிழக அரசு

இன்றைய தினத்தின் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகள் அனைத்தையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 22 Jan 2022 11:51 AM
குடிமைப் பணி அதிகாரிகளின் பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாகக்  கைவிடுக - கமல்ஹாசன்

குடிமைப் பணி அதிகாரிகளின் பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாகக்  கைவிட வேண்டும். இந்தத் திருத்தம் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதோடு கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது என மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பாரத பிரதமர் தேவ கவுடாவுக்கு கொரோனா தொற்று

முன்னாள் பாரத பிரதமரும், ஜனதா தளம் (எஸ்) அரசியல் கட்சித் தலைவருமான   தேவ கவுடாக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த அமைச்சர் பிரகலாத் ஜோஷி திட்டம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதை அடுத்து, இரு அவைகளையும் சுமூகமாக நடத்துவது குறித்துநாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேட்டறிவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அகில இந்திய குடிமை பணி அதிகாரிகள் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு - மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

அகில இந்திய குடிமை பணி அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதலின்றி மத்திய அரசின் பணிக்கு மாற்றும் 1954ஆம் ஆண்டு சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதவுள்ளதாக தகவல்

மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் இணைப்பு சாலை செம்மொழி சாலை என பெயர் மாற்றப்படும் - முதல்வர்

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் அமைந்துள்ள மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் இணைப்பு சாலை செம்மொழி சாலை என பெயர் மாற்றம் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 

கலைஞர் மு. கருணாநிதி தமிழ் செம்மொழி விருது - 10 அறிஞர்களுக்கு முதல்வர் இன்று வழங்குகிறார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் 2010- 2019 ம் ஆண்டு வரை கலைஞர் மு. கருணாநிதி தமிழ் செம்மொழி விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதினை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்குகிறார். 


விருதாளருக்கு ரூ. 10 லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழ் மற்றும் கலைஞர் கருணாநிதி சிலையும் வழங்கப்பட்டது.  


2010 - முனைவர் வீ.எஸ். இராஜம், (Former Senior Lecturer, Department of South Asia Regional Studies, University of Pennsyhvania) .


2011 - பேராசிரியர் பொன். கோதண்டராமன் (மேனாள் துணைவேந்தர். சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை)


2012 - பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி (மேனாள் துணைவேந்தர். தமிழ்ப்பல்கலைக்கழகம்)


 2013 பேராசிரியர் ப.மருதநாயகம்(மேனாள் இயக்குநர்,புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம்)


2014 - பேராசிரியர் கு. மோகனராசு (மேனாள்பேராசிரியர்&தலைவர். திருக்குறள்ஆய்வுமையம், சென்னைப்பல்கலைக்கழகம், சென்னை}


2015 -  பேராசிரியர். மறைமலை இலக்குவனார் (மேனாள் தமிழ்ப்பேராசிரியர், மாநிலக்கல்லூரி) 


2016 - பேராசிரியர் கா. ராஜன் (மேனாள் பேராசிரியர். வரலாற்றுத் துறை  புதுவைப் பல்கலைக்கழகம்) 


2017 - பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ், Professor and Head of the Institute of. Indology and Tamil Studies, Cologne University, Germany.


9. 2018 - கவிஞர் ஈரோடு தமிழன்பன் (மேனாள் தமிழ்ப் பேராசிரியர், புதுக்கல்லூரி, சென்னை).


2019 - பேராசிரியர் கு.சிவமணி (மேனாள்முதல்வர். கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் & திருவள்ளுவர் கல்லூரி, நெல்லை).


2009 முதல் 2019 வரையிலான பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படாமல் இருந்து கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி விருது தற்போது வழங்கப்பட்டு வருகிறது.    

India Daily Covid-19 Case Updates: கடந்த 24 மணி நேரத்தில் 3,37,704 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் 3,37,704 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு, முந்தைய நாளை விட, இது 9,550 எண்ணிக்கை குறைவாகும் 


இதுவரை மொத்தம் 10,050 ஒமிக்ரான் பாதித்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.   


தினசரி பாதிப்பு விகிதம் 17.22 சதவீதம் ஆகும்


 

7 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது கட்டாயமில்லை - மத்திய அரசு

இந்தியாவிற்கு  வரும் அனைத்து பயணிகளும் 7 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.  அதன்படி, தனிமைப்படுத்திக் கொள்வது கட்டாயமில்லை என்றும், அந்தந்த மாநில அரசுகள் சூழலுக்கு ஏற்ப ஆய்வு செய்து முடிவெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 

கோவின் இணையதளத்திலிருந்து எந்த தகவலும் கசிய விடப்படவில்லை -மத்திய அரசு

கோவிட் தடுப்பூசி தொடர்பான கோவின் இணையதளத்திலிருந்து எந்த தகவலும் கசிய விடப்படவில்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. 



கோவின் இணையளத்தில் ஒரு போன் எண்ணில் தற்போது 6 பேர் பதிவு செய்ய முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை

பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  


சென்னையில் நேற்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார். பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும், அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். 

Background

பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடுகிறார். இந்த உரையாடலின் போது, மாவட்டங்களில் அரசு திட்டங்களின் செயல்பாட்டின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலை குறித்து பிரதமர் நேரடியாக கருத்துக் கேட்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 


புதுடெல்லி இந்தியா கேட்டில் உள்ள அமர்ஜவான் ஜோதி எனப்படும் அணையா விளக்கு தேசிய போர் நினைவுச்சின்னத்தில் உள்ள அணையா விளக்குடன் நேற்று இணைக்கப்பட்டது. 1971-ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போருக்கு பிறகு இந்தியா கேட்டில் அணையா விளக்கு நிறுவப்பட்டது. பின்னர் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா கேட்டில் தேசிய போர் நினைவுச்சின்னம் கட்டப்பட்டது.  


தமிழகத்தில் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், வரும் 23ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையும் முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது நடைமுறைப்படுத்தப்பட்ட அத்தியாவசிய செயல்பாடுகள்  அனுமதிக்கப்படும், தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடை தொடரும் என்றும் கூறியுள்ளார்.


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.