News Today LIVE: சென்னையில் மேலும் 6 மணிநேரத்துக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்..

இன்றைய தினத்தின் முக்கிய செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்

ABP NADU Last Updated: 30 Dec 2021 09:46 PM
சென்னையில் மேலும் 6 மணிநேரத்துக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்..

 சென்னையில் மேலும் 6 மணிநேரத்துக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்..

சென்னையில் மெட்ரோ ரயில் நேரம் நீட்டிப்பு..

சென்னையில் மெட்ரோ ரயில் நேரம் நீட்டிப்பு.. 12 மணி வரை மெட்ரோ ரயில் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறப்பு

சென்னையில் 2 மணிநேரத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு..

புளியந்தோப்பு பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரு பெண் உயிரிழப்பு, ஓட்டேரி நியூ பேரண்ட்ஸ் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழப்பு, மயிலாப்பூரில் ஒரு சிறுவன் உயிரிழப்பு

சென்னையில் சுரங்கப்பாதை மூடல் : தண்ணீர் தேங்கி நிற்பதால் நடவடிக்கை

 சென்னையில் சுரங்கப்பாதை மூடல் : தண்ணீர் தேங்கி நிற்பதால் நடவடிக்கை

சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

சென்னை, புளியந்தோப்பில் மின்சாரம் தாக்கி இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது

சிவப்புக் கழுத்துடன் பச்சை பறவை என்னும் சிறுகதைக்காக சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் அம்பை

துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவு

புதுக்கோட்டை துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையத்தால் சிறுவன் மீது குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரக் கூடிய நிலையில் பசுமலைபட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவு. மேலும் இதற்கென்று தனியாக குழு அமைத்து பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பயிற்சி மையம் செயல்படுத்தலாமா என்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று தகவல்.

வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த சிறுவன் தலையில் தாக்கிய தோட்டா: CISF துப்பாக்கி பயிற்சியில் விபரீதம்!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் ஊராட்சியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மத்திய தொழிற் பாதுகாப்பு படை( CISF) வீரர்கள் அடிக்கடி பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த மையத்திற்கு அருகில் சில குடியிருப்புகள் இருப்பதாக  கூறப்படுகிறது. 


இந்நிலையில் இன்று வழக்கம் போல அந்த பகுதியில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கொத்தமங்கலப்பட்டி கலைச்செல்வன் என்பவரது மகன் புகழேந்தி(11) என்பவர், அப்பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு காலை உணவு அருந்த வந்துள்ளார். வீட்டிற்கு வந்த பேரனுக்கு அவனது தாத்தா, உணவு அளித்த நிலையில், சிறுவன் வீட்டில் அமர்ந்து உணவு உட்கொண்டிருந்துள்ளார். அப்போது, பயிற்சியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் சுட்ட துப்பாக்கி குண்டு, குடியிருப்பு பகுதியில் நுழைந்ததாக கூறப்படுகிறது. இரண்டு குண்டுகள் அவ்வாறு வந்த நிலையில், ஒரு குண்டு புகழேந்தி உணவருந்திக் கொண்டிருந்த வீட்டிற்குள் பாய்ந்தது. 


அதில் புகழேந்தியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் அவர் சுருண்டு விழுந்தார். மற்றொரு குண்டு, வீடு ஒன்றின் உளளே நுழைந்தது. அதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை உடனே தூக்கிக் கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புத்தாண்டன்று கோவில்களில் மக்கள் வழிபாடு செய்ய அனுமதி - அமைச்சர் சேகர்பாபு

புத்தாண்டன்று கோவில்களில் மக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவதாக  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மக்கள் கடைப்பிடித்து பாதுகாப்புடன் ஆலயங்களில் வழிபட வேண்டுமென்று  அறிவுறுத்தினார்

INdia Omicron INfection: ஒமிக்ரானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961ஆக அதிகரித்துள்ளது

ஒமிக்ரானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 781ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 961ஆக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 263 பேரும், மகாராஷ்டிராவில் 252 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்

உலக அளவில் கொரோனா பாதிப்பு 11 % அதிகரித்துள்ளது - உலக சுகாதார அமைப்பு

கடந்த வாரத்தில் உலக அளவில் கொரோனா பாதிப்பு 11 % அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அன்பில் மகேஷை அரசின் சார்பில் பாராட்டுகிறேன் - மு.க ஸ்டாலின்


Background

டெல்லியில் தொற்று பாதிப்பு தொடர்பாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள், கல்லூரிகள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள், விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் மூடப்படுவதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.