Breaking News Live: இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் : திட்டம் தொடக்கம்..
தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.
106 முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு, 20000 வீடுகள் கட்டித் தரும் தமிழக அரசின் திட்டம் தொடக்கம்
Background
Today Breaking news Live: கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,30,127 கோடி வசூலாகியுள்ளது. இது, கடந்த ஆண்டு அக்டோபர் ஜிஎஸ்டி வருவாயைவிட 24 சதவீதம் அதிகமாகும். மேலும், கொரோனா தொற்றுக்கு முந்தைய 2019-20 நிதியாண்டின் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாயைவிட 36 சதவீதம் அதிகமாகும்.
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் ஐ.நா பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றும் வகையிலும், தேசிய அளவில் பெறப்பட்ட பங்களிப்புகளின் அடிப்படையிலும் இந்தியா செயல்பட்டு வருவதாக தெரவித்த அவர், 2070-ல் நிகர-பூஜ்ஜிய உமிழ்வு (Carbon Neutrality) நிலையை இந்தியா அடைய இருப்பதாக உறுதி மொழி அளித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -