Breaking Live: ஒரேநாளில் 28 லட்சம் பேருக்கும் மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம்களில் ஒரேநாளில் 28.20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்த நிலையில் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 40,000 முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 1,639இல் இருந்து 1,608 ஆக குறைந்துள்ளது. சென்னையில் மேலும் 197 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 22 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,168 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நிறைவு பெற்றது. கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டு நடைபெற்ற தேர்வை 3,862 மையங்களில் 16.14 லட்சம் பேர் எழுதினர். முதன்முறையாக தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 70 ஆயிரம் மாணவிகள், 40 ஆயிரம் மாணவர்கள் என 1.10 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூரில் நீட் தேர்வுக்கு அஞ்சி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட மாணவர் தனுஷ் உடலுக்கு எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மத்திய அரசு மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கியது. z
தமிழ்நாட்டில் மட்டும் நீட் தேர்வு மொத்தம் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்பட 18 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 889 மாணவர்கள் நீட் தேர்வை எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் இருந்து 17 ஆயிரத்து 996 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். சென்னையில் மட்டும் 33 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கியது.. 2 மணிமுதல் 5 மணிவரை நடைபெறுகிறது. 13 மொழிகளில் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்
மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது சரியான முடிவாக இருக்காது. குறுகிய காலம் என்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. மாணவர்கள் மனம் தளரக்கூடாது என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார்.
மாணவர் தனுஷ் மரணத்திற்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது என்ற முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெறுகிறது.
9-12ஆம் வகுப்பு மாணவர்களின் வருகை பதிவு, தொற்று பரவல் ஆகியவை கண்காணிக்கப்பட்டு, வரும் 15ஆம் தேதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.அதன் பிறகு,தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சென்னை மாநகராட்சி துவக்கிய மழைநீர் வடிகால் திட்டத்திற்கு CRZ அனுமதி அவசியமாகும். திட்டத்தை மறு பரிசீலனை செய்ய தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. CRZ அனுமதியின்றி திட்டத்தை தொடரக் கூடாது எனவும் தீர்ப்பு.
Background
Latest News in Tamil Today LIVE
குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அம்மாநில ஆளுநர் ஆசார்யா தேவ்ராத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்துள்ளார். அடுத்தாண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 65 வயதான விஜய் ரூபானி, ஆனந்தி பென் படேலுக்குப் பிறகு முதல்வரானவர். கடந்த 2016 முதல் குஜராத் முதலமைச்சராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது ராஜினாமாவுக்குப் பிறகு ரூபானி, குஜராத் முதல்வராக ஐந்து ஆண்டுகள் இருப்பது பெரும் கவுரவம் என்று கூறினார். "கட்சியில் உள்ள பொறுப்புகள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்க வேண்டும். இது கட்சியில் இயல்பான செயல். ஐந்து வருடங்கள் முதலமைச்சராக இருக்கும் பொறுப்பு எனக்கு கிடைத்தது. இது ஒரு சிறந்த வாய்ப்பு, ”என்று அவர் கூறினார்.
மன்சுக் மாண்டவியா, பர்ஷோத்தம் கோடாபாய் ரூபலா மற்றும் நிதின் படேல் ஆகியோரில் ஒருவர் முதலமைச்சராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -