TamilNadu Coronavirus Highlights: கோவையில் மட்டும் இன்று 25 பேர் கொரோனாவுக்கு பலி

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 24 Jun 2021 06:32 AM
கோவையில் மட்டும் இன்று 25 பேர் கொரோனாவுக்கு பலி

தமிழ்நாட்டில் இன்று 6 ஆயிரத்து 596 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,66,628 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 6,596 ஆக உள்ளது.


இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 43 ஆயிரத்து 415 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 30 ஆயிரத்து 34 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 396 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை 793, ஈரோடு 686, சேலம் 472, திருப்பூர் 419, தஞ்சாவூர் 338, செங்கல்பட்டு 277, நாமக்கல் 269, திருச்சி 247, திருவள்ளூர் 183, கடலூர் 168, திருவண்ணாமலை 173, கிருஷ்ணகிரி 152, நீலகிரி 125, கள்ளக்குறிச்சி 134, மதுரை 120,  ராணிப்பேட்டை 103, கன்னியாகுமரி 122, நாகை 119, தருமபுரி 102, விழுப்புரம் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


கொரோனாவால் மேலும் 166 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,746 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 109 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 57 பேரும் உயிரிழந்தனர். கோவையில் மட்டும் 25 பேர் உயிரிழந்தனர்.  சென்னை 20, வேலூர் 25, கடலூர், நாகை, சேலம் திருப்பூரில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா 

தமிழ்நாட்டில் சென்னையில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறினார். மேலும், ஆயிரத்துக்கு மேற்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறினார். ஏற்கெனவே மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளாவில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

2ஆம் தவணை ரூ.2,000, 14 மளிகைப் பொருட்கள் - 25க்குள் வழங்க அரசு உத்தரவு

ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண இரண்டாம் தவணை ரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்களை வரும் 25ஆம் தேதிக்குள் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் விநியோகம் கடந்த 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் 25ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்வு

இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்து தற்போதே மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அயல் நாடுகளில் கொரோனா நோய்த் தொற்று அதிகரிக்கத் தொடங்கியது.


போன்ற நாடுகளில் தினசரி கொரோனா நோய்த் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.   

100 சதவீதம் தடுப்பூசி போட திட்டமிட்டு செயல்பட வேண்டும் - சிவகங்கை மாவட்ட ஆட்சியர்

சிவகங்கை மாவட்டத்தில் கோவிட் நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி 100 சதவீதம் தடுப்பூசி போட திட்டமிட்டு செயல்பட வேண்டும் என மாவட்ட அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்.

மதுரையில் இன்று (ஜூன் 23) கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்.




45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மேற்காணும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்படும்.

தமிழ்நாடு கொரோனா தடுப்பூசி நிலவரம்

திருவாரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, சிவகாசி, தென்காசி, விருதுநகர், கன்னியகுமாரி, நாமக்கல், கோவில்பட்டி, செய்யாறு உள்ளிட்ட மாவட்ட சுகாதார மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்ட விகிதம் 100%க்கும் அதிகமாக உள்ளது.    


 


இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 கோடியை தாண்டியது

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனவால் பாதிக்கப்பட்டோரின்  மொத்த எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியது. 


குணமடைந்தோர் விகிதம் 96.56 சதவீதம். கொரோனா பாதிப்பு  உறுதி (Positivity Rate )வாராந்திர வீதம் 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. தினசரி பாதிப்பு உறுதி வீதம் 2.67 ஆக  குறைந்துள்ளது.  

டெல்டா வகை அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது- அந்தோனி பாசி

புதிய உருமாறிய டெல்டா வகை கொரோனா நோய்த் தொற்று அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என அமெரிக்கா வெள்ளை மாளிகை மருத்துவ ஆலோசகர் அந்தோனி பாசி  தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றை முழுமையாக ஒழிக்கும் அமெரிக்காவின் முயற்சிகள் மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என்றும் எச்சரித்தார்.        

மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட சுகாதார கட்டமைப்புகளை தொடர்ந்து பராமரிக்க மத்திய மாநில அரசுகளை சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்

வரும் 26ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் விளையாட்டு வீரர்களுக்கான தடுப்பூசி முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டில் தற்போதைய கொரோனா நிலவரம் என்ன?

கடந்த 24 மணி நேரத்தில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை (6,895), முதலாவது கொரோனா அலையின் போது பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச ஒரு நாள் பாதிப்பை விட குறைவாக இருந்தது. அதாவது, முதலாவது அலையின் உச்சகட்ட பாதிப்பை ( ஜூலை 27, 2020 - 6,988) விட இரண்டாவது அலையின் தினசரி பாதிப்பு தற்போது தான் குறையத் தொடங்கியுள்ளது. முதலாவது அலையின் போது, தமிழ்நாடு தனது உச்சகட்ட பாதிப்பை 120 நாட்களுக்குப் பிறகு  எட்டியது (ஜூலை 27,2020). இரண்டாவது அலையில் வெறும் 60 நாட்களுக்குள் 36,184 (21, மே 2021)என்ற உச்சக்கட்ட பாதிப்பை கடந்தது. 

Background

மகாராஷ்டிராவின் ரத்னகிரி மற்றும் ஜல்கான் மாவட்டங்களிலும், கேரளாவின் பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் போபால் மற்றும் சிவபுரி மாவட்டங்களிலும் டெல்டா பிளஸ் வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. 


அதிகமாக பரவக்கூடிய தன்மை, நுரையீரல் செல்களின் ரிசப்டார்களுடன் வலுவாக ஒட்டக் கூடிய தன்மை மற்றும் பிற பொருள் எதிரிகளின் எதிர்வினையை குறைக்கும் தன்மையை இந்த கொரோனா வைரஸ் வகை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.