Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 17,321 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று.

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 09 Jun 2021 07:36 PM
தமிழ்நாட்டில் இன்று 17,321 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று.

தமிழ்நாட்டில் இன்று 17,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

உருமாறிய கொரோனாவுக்கு எதிரானதா கோவாக்சின்? ஆய்வு சொல்வது என்ன?

புதிய வகை உருமாறிய கொரோனா தொற்றான பி.1.617 டெல்டா மற்றும் பி.1.351 பீட்டாவுக்கு எதிரான நோய்த்தீவிரத் தன்மையின் தாக்கம் (titer for neutralizing antibodies) முறையே 3 மற்றும் 2.7 மடங்கு குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது.

கோவின் செயலியை தமிழில் மொழியாக்கம் செய்தமைக்கு நன்றி - எடப்பாடி பழனிசாமி

கோவின் செயலியில் தமிழ் மொழியை பயன்பாட்டு மொழியாக்கம் செய்தமைக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவிதுள்ளார்


இதுகுறித்து, அவர் வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில், " கொரோனா துயர்துடைக்க நாட்டில் உள்ள 75% மக்களுக்கு உயிர் காக்கும்  தடுப்பூசியை இலவசமாக வழங்கியதற்கும், நவம்பர் மாதம் வரை  குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளமைக்கும், கோவின் செயலியில் தமிழ் மொழியை பயன்பாட்டு மொழியாக்கம்  செய்தமைக்கும் பிரதமர் மோடிக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்" என்று பதிவிட்டார்.  

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டவில்லை - பிரதீப் கவுர்

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டவில்லை என ஐசிஎம்ஆர் தமிழகப் பிரிவு துணை இயக்குநர் பிரதீப் கவுர் தெரிவித்தார். 


கொரோனா தடுப்பூசி திட்டத்தில், தற்போது தமிழ்நாடு சந்திக்கும் மூன்று பிரச்சனைகளையும் அவர் பட்டியலிட்டார்.      


 தடுப்பூசி விநியோகத்தில் உள்ள தட்டுபாடுகள் 
 எங்க தடுப்பூசி டோஸ்கள் போடப்படுகிறது போன்ற முழுமயான தகவல்கள்  மக்களிடம் இல்லை, 
 தடுப்பூசி மையங்களுக்கு செல்ல முதியவர்கள் சிரமங்களை சந்திக்கின்றனர். 

தேவையில்லாமல் மக்கள் வெளியே நடமாடக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கிலிருந்து தளர்வு மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் வரும் மற்றும் நடமாடும் நபர்களை கட்டுப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 94.5 சதவிகிதம் பேர் குனமடைந்துள்ளனர். 

நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றல் பாதிக்கப்பட்டவர்களில் 94.5 சதவிகிதம் பேர் குனமடைந்துள்ளனர்.   


 


Coimbatore Covid-19 Case Updates: தினசரி பாதிப்பில் கோயம்பத்தூர் மாவட்டம் முதலிடம்

இந்தியாவில், தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் பதிவுசெய்யப்படும் மாவடங்களில் கோயம்பத்தூர் முதலிடத்தில் உள்ளது.



 



கடந்த, 24 மணி நேரத்தில் 2,444 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.


 
கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.



55வயதுக்கு மேற்பட்டோருக்கு நிறுத்தப்பட்ட 100நாள் வேலை திட்டத்தை தொடங்க வேண்டும்

கொரோனா ஊரடங்கு காலத்தில், 55வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏப்ரலில் அதிமுக அரசால்  நிறுத்தப்பட்ட 100நாள் வேலை திட்டத்தை, மீண்டும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.


 


தடுப்பூசிக் கையிருப்பு, வழங்கல் நிலை, சேமிப்பு வெப்பநிலை பற்றிய தகவல்கள் அரசுக்கு சொந்தமானது

தடுப்பூசிக் கையிருப்பு, வழங்கல் நிலை, சேமிப்பு வெப்பநிலை பற்றிய தகவல்கள் அரசுக்கு சொந்தமானது.  அரசு அனுமதியின்றி பொது வெளியில் இத்தகைய தகவல்கள் பகிர்ந்து கொள்ளக் கூடாது என மத்திய சுகாதார அமைச்சகம்  தெரிவித்தது.  


கர்ப்பிணிப் பெண்கள், தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாமா? மத்திய அரசு விளக்கம்

தற்போதைய வழிகாட்டுதலின்படி, கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளக்கூடாது. தடுப்பூசி சோதனையிலிருந்து பெறப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் சமூகத்தினரால் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசியைப் பரிந்துரைக்க இயலவில்லை. எனினும் புதிய அறிவியல் தரவுகளின் அடிப்படையில் இந்த சூழ்நிலையை இந்திய அரசு தெளிவுபடுத்தும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால் தெரிவித்தார். 


கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசிகளை செலுத்தும் பணியை பல்வேறு நாடுகள் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தொடர்பான  தரவுகளும் விரைவில் வெளியிடப்படும். ஒரு சில தரவுகள் ஏற்கனவே கிடைத்துள்ளன, இந்தியாவில் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தேவையான தரவுகளும், ஒப்புதல்களும் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம் என எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்தர்.  


 

குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது தவறான தகவல்

கொரோனா பெருந்தொற்றின் அடுத்தடுத்த அலைகளால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது தவறான தகவலாகும். இதை நிரூபிப்பதற்கான எந்தவொரு தரவும் இந்திய அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ இல்லை என்று புதுடெல்லி எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரண்தீப் குலேரியா கூறினார்.


 

Background

Tamil Nadu Coronavirus Live News : தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,023 ஆக உள்ளது. இது, கடந்த 38 நாட்களில் மிகக்குறைவு.  தற்போது, மாநிலம் முழுவதும் 2,18,595 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 31,045 பேர் குணமடைந்தனர்.


தொடர்ந்து 12-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.