Tamil Nadu Coronavirus LIVE : தமிழ்நாட்டில் 3,039 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 09 Jul 2021 07:31 PM
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை என்ன?

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை, 33,224-ஆக உள்ளது

தமிழ்நாட்டில் 3,039 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!

தமிழ்நாட்டில் 3,039 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!

தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு

தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், இரண்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  வடகிழக்கு மாநிலங்கள், கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து வருவது கவலையளிப்பதாகவும் கூறியுள்ளது.

ஸிகா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை

ஸிகா வைரஸ் குறித்து தமிழ்நாட்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியைச் சேர்ந்த கர்ப்பிணி மகப்பேறு முடிந்து நன்றாக இருக்கிறார். ஏ.கே.ராஜன் குழு அறிக்கை தாக்கல் செய்த பிறகுதான் நீட் தேர்வு குறித்து பேச முடியும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா நெறிமுறைகளை பொது மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் - பிரதமர் மோடி

ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது போன்ற நெறிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய அளவில் கொரோனா தடுப்பூசி நிலவரம்

அகில இந்திய அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விவரம் 



India Coronavirus Updates: நாடு முழுவதும் 43,393 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

: கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 43,393 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய்த் தொற்றுக்கு 911 உயிர்களை இந்தியா இழந்துள்ளது.  

சென்னையில் இன்று தடுப்பூசி போடும் பணிகள் ரத்து

கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (09.07.2021) பொதுமக்களுக்கான தடுப்பூசி போடும் பணிகள் ரத்து செய்யப்பட்டது.       

டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது

கொரோனா தொற்று பரவல் காரணமாக, டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என டோக்யோ 2020 ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.      

36.48 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 36.48 கோடியைக் கடந்தது

இந்திய கோவிட்-19 அவசரகால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை தொகுப்பு: பகுதி II

ரூ 23,123 கோடி செலவிலான “இந்திய கோவிட்-19 அவசரகால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை தொகுப்பு: பகுதி II”-க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


நோய்களை விரைந்து தடுத்தல், கண்டறிதல் மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் உடனடி செயல்பாடுகளுக்காக சுகாதார அமைப்பின் தயார்நிலையை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. குழந்தைகள் நலம் உள்ளிட்ட சுகாதார உள்கட்டமைப்பின் மேம்பாடு மற்றும் அளவிடக்கூடிய வெளிப்பாடுகள் மீது இது கவனம் செலுத்தும் என மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.   


 

Background

தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், இரண்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  வடகிழக்கு மாநிலங்கள், கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து வருவது கவலையளிப்பதாகவும் கூறியுள்ளது.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.