Tamil Nadu Coronavirus LIVE : தமிழகத்தில் மேலும் 3211 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் மேலும் 3211 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. உயிரிழப்பு 57
சென்னையில் போடப்படும் தினசரி தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. கடந்த 24 மணி நேரத்தில், வெறும் 1,251 பேருக்கு மட்டுமே தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. விதிகளை மீறி செயல்படுவோர் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்குமாறு அந்நாட்டு காவல்துறையிடம் சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
கர்நாடகாவிலிருந்து கேரளாவிற்கு கொரோனா எல்லைமூடல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை வரும் திங்கட் கிழமை முதல் தொடங்கும் என்று கர்நாடக மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் மண்டல வாரியாக கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் விபரம்:
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, டோக்கியோ நகரில் ஜப்பான் அரசு அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தியுள்ளது. இன்னும், 10 நாட்களில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.
நாட்டில் 1 8-44 வயதுடைய பயனாளிகளில் 10.93 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, பிகார், குஜராத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் 18-44 வயது பிரிவினருக்கு 50 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியுள்ளன.
நாட்டில் 35 மாநிலங்களில், 174 மாவட்டங்களில், மாறுபட்ட வகை கொரோனாக்கள் கண்டறியப்பட்டன. அதிக எண்ணிக்கையிலான மாறுபாடுகள், மகாராஷ்டிரா, தில்லி, பஞ்சாப், தெலங்கானா, மேற்குவங்கம் மற்றும் குஜராத்தில் கண்டறியப்பட்டன. இந்த மாறுபட்ட கொரோனா மாதிரிகள், ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா வகையை சேர்ந்தது.
மகாராஷ்டிராவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 வகையின் பாதிப்பு பல மாவட்டங்களில் வழக்கத்துக்கு அதிகமாக இருந்தது. இது தற்போது நாட்டின் பல மாநிலங்களில் காணப்படுகிறது என மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.
கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 45,892 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,60,704 ஆகக் குறைந்துள்ளது. நம் நாட்டில் இதுவரை 2,98,43,825 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 44,291 பேர் குணமடைந்துள்ளார்கள்.
மேலும், 817 பேர் கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர். இதன் மூலம், நாட்டின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 4,05,028 ஆக அதிகரித்துள்ளது.
Background
2021 ஜூலை மாதம், கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ், தற்போது வரை 2.19 கோடி டோஸ்களுக்கும் அதிகமான தடுப்பு மருந்துகள் ஜூலை மாதத்திற்கான ஒதுக்கீட்டில் இருந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஜூலை மாதத்தில் 12 கோடி டோஸ்களுக்கும் அதிகமான தடுப்பு மருந்து வழங்கப்பட இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -