Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் இன்று 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 29 பேர் உயிரிழப்பு!
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டின் கடந்த 24 மணிநேரக் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1767. மேலும் ஒருநாளில் மட்டும் 29 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 785 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,37,292 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,785ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 50 ஆயிரத்து 282 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 37 ஆயிரத்து 249 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 122 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 122 ஆக உள்ளது.
கோவை 164 , ஈரோடு 127, தஞ்சை 103, சேலம் 102, செங்கல்பட்டு 96, திருப்பூர் 90, கடலூர் 73, திருவண்ணாமலை 69, திருவள்ளூர் 68, திருச்சி 63, நீலகிரி 58, நாமக்கல் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்ட முதல் மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்வதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
குடும்ப அட்டைதாரா்கள் கொரோனா நிவாரணத்தொகை மற்றும் மளிகைப் பொருள்கள் தொகுப்பினைப் பெறாதவா்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் நியாய விலைக் கடைகளில் நிவாரணத் தொகையையும், மளிகைப் பொருள்களையும் பெற்றுக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஒருவேளை கொரோனா பாதிப்பு அல்லது பிற முக்கியக் காரணங்களால் 31-ஆம் தேதிக்குள் அவற்றை வாங்க இயலாவிடில், மாவட்ட வழங்கல் அலுவலரிடம் நியாய விலைக் கடை மூலமாகத் தகவல் தெரிவித்து அனுமதிபெற்று அதன்பின் பயனாளிகளுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆண்கள், பெண்கள் என தனித்தனியே காவலர் உடல் தகுதி தேர்வு நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
வங்கதேசத்தில் மாதந்தோறும் ஒரு கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் சாகித் மாலேக் தெரிவித்துள்ளார்.
கோயம்பத்தூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்களைப் பற்றிய விபரங்கள்
குழந்தைகளுக்கான பிரதமரின் நலநிதிக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளத்தை (pmcaresforchildren.in),பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இது போன்ற குழந்தைகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநிலங்களின் செயலாளர்கள், யூனியன் பிரதேச நிர்வாகிகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பணிகள் அடுத்த 15 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். இதற்காக பிரத்தியேக உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த மையத்தை 011-23388074 என்ற தொலைபேசி எண்ணிலும் அல்லது pmcares-children.wcd@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
இந்த இணையத்தில் குழந்தைகளின் பதிவு முன்னேற்றத்தை கண்காணிக்கும்படி மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (Weekly Positivity rate) 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து, 2.31 சதவீதமாக உள்ளது. தினசரி தொற்று உறுதி வீதம் (Daily Positivity rate) 2.31 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 45.74 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 39,361 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 39,972 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,05,43,138 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.36 சதவீதமாகும். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,11,189 ஆக உள்ளது.
Background
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 45.37 கோடிக்கும் அதிகமான (45,37,70,580) தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 11,79,010 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன. இதில், மொத்தம் 42,08,32,021 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 3.29 கோடி (3,29,38,559) கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -