Tamil Nadu Coronavirus LIVE: குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வில் ஒளியேற்ற தமிழ்நாடு அரசு ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம்
தமிழகத்தில் இதுவரை இரண்டு கோடியே ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 901 (2,10,54,901) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று எழுப்பிய சவாலான சூழ்நிலைகளுக்கு தீர்வு காண்பதற்கு புத்தரின் அனைத்து நெறிமுறைகளையும் பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை சிறுவர்களிடம் செலுத்தி பாரத் பயோடெக் நிறுவனம் மேற்கொள்ளும் பரிசோதனைகளின் முடிவுகள் அடுத்த மாதத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஏய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.
மாநிலத்தின் 34 மாவட்டங்களில் தொற்று விகிதம் 2 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக தொற்று உறுதி விகிதம் 2.9% ஆக உள்ளது.
தமிழ்நாட்டின் தினசரி கொரோனா தொற்று விகிதம் 1.35% ஆக குறைந்தது.
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கொரோனா தொற்றால், கடந்த 24 மணி நேரத்தில் 1,830 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன், மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்துக்கும் (25,44,870) அதிகமாக உயர்ந்துள்ளது.
Background
சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், நாடு முழுவதும் மொத்தம் 41,12,30,353 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது. 2.75 கோடிக்கும் அதிகமான (2,75,19,837) கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -