Coronavirus LIVE : மாவட்டம் வாரியாக 69,970 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி டோஸ்கள் ஒதுக்கீடு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி பயனாளிகளில் 28.9% பேர் மட்டுமே முதல்கட்ட தடுப்பூசி டோஸ்களை போட்டுக் கொண்டுள்ளனர். 6.3% பயனாளிகள் மட்டுமே இரண்டுகட்ட தடுப்பூசி டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளனர். இது, தேசிய சராசரி தடுப்பூசி எண்ணிக்கையை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது.
69,970 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி டோஸ்கள் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
சேலம் மாவட்டத்தில் இன்று (23.07.2029) மொத்தம் 138 மையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு மொத்தம் 24.500 கோவிஷில்டு தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன. இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் தவனை கோவிஷில்டு தடுப்பூசி மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவிஷில்டு தடுப்பூசி போடப்படும். கோவாக்சின் தடுப்பூசி இருப்பில் இல்லை எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
நாடு முழுவதும் வயது வாரியாக கோவிட் தடுப்பூசி எடுத்துகொண்டோர் விபரம்:
- 60 வயதுக்கு மேல்: 25.5%
- 45-60 வயது: 34.1%
- 18-44 வயது: 40.4%
கடந்த 24 மணி நேரத்தில், 35,342 புதிய பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகி உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 38,740 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும், இதுவரை 3,04,68,079 பேர் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்காக 4,05,513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில், 483 உயிர்களை இந்தியா இழந்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,866 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட ஒருநாள் அதிகபட்ச பாதிப்பு இதுவாகும்.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 133 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது, செனையில் மிகக்குறைந்த ஒருநாள் பாதிப்பாகும். முதலவாது அலையின் போது, பிப்ரவரி 1ம் தேதியன்று பதிவான 134 என்பதே இதுவரை குறைந்தபட்ச ஒருநாள் பாதிப்பாக இருந்தது.
கொரோனா இரண்டாவது அலையின் போது, 13,000 பயன்படுத்தப்படாத சுவாசக் கருவிகளை மத்திய அரசு வைத்திருந்தது எனும் செய்தி உண்மைக்கு புறம்பானது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " 13,000 சுவாசக் கருவிகளை மாநிலங்களுக்கு வழங்காமல் மத்திய அரசு வைத்திருந்ததாக வரும் செய்தி அடிப்படை ஆதாரம் இல்லாதது. பெருந்தொற்றின் தொடக்கத்திலேயே சுவாசக் கருவிகளை வாங்குவதற்கான ஆர்டரை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகம் வழங்கியிருந்தது. 2020 மார்ச் 27 முதல் ஏப்ரல் 17 வரை 58,850 சுவாசக் கருவிகளை கொள்முதல் செய்வதற்கான ஆர்டரை அரசு வழங்கியிருந்தது. இவை அனைத்தும் நமது நாட்டிலேயே தயாரிக்கப்படும் சுவாசக் கருவிகளாகும்.
2020 நவம்பர் வரை மாநிலங்கள் கேட்ட 35,398 சுவாசக் கருவிகளும் கிட்டத்தட்ட வழங்கப்பட்டு விட்டன. நவம்பரில் இருந்து 2021 மார்ச் வரை, சுவாசக் கருவிகளுக்கான தேவை 996 ஆக மட்டுமே இருந்ததால், கூடுதலாக அவை மட்டுமே விநியோகிக்கப்பட்டன. மேற்கண்ட சுவாசக்கருவிகளில் அதிக எண்ணிக்கையிலானவை மாநிலங்களால் பயன்படுத்தப்படாமல் இருந்த காரணத்தால், அவற்றை முறையாக பயன்படுத்துமாறு 2021 ஏப்ரல் 11 அன்று மத்திய சுகாதார செயலாளர் சில மாநிலங்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதைத் தொடர்ந்து நினைவூட்டல்களும் பல முறை அமைச்சகத்தால் அனுப்பப்பட்டன " என்று தெரிவிக்கப்பட்டது.
Background
மருத்துவமனைகளில் உயிரிழப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து பாதிப்புகள் அல்லது உயிரிழப்புகள் விடப்பட்டிருந்தால் அவற்றை முறையாக பதிவு செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறித்தியுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -