TN Corona LIVE Updates: தமிழகத்தில் 11 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்று
தமிழகத்திலும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Background
ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 10941 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 6172 பேர் கொரேனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் புதிதாக 10941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,02,392-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 3347 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 2,86, 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று குணமடைந்து நேற்று மட்டும் 6,172 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,14,119 ஆக உள்ளது. மேலும் கொரோனா சிகிச்சை பலனின்றி இன்று 44 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,157 ஆக அதிகரித்துள்ளது. மார்ச் மாத இறுதியில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி மொத்த கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு சராசரி பாதிப்பு எண்ணிக்கை 2500-ஆக இருந்தது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில். இந்த தொற்றால் ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 170 பேருக்கு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 2.61 லட்சம், நேற்று 2.70 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 2.59 லட்சமாக குறைந்தது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 170 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 50 லட்சத்து 61 ஆயிரத்து 919 - இல் இருந்து ஒரு கோடியே 53 லட்சத்து 21 ஆயிரத்து 89- ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 14 கோடியே 26 லட்சத்து 87 ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 42 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 37 ஆக உள்ளது . ஒரு கோடியே 83 லட்சத்து 47ஆயிரத்து 144 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 40 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு பட்டியலில் இருக்கும் அமெரிக்காவில் புதிதாக 50 ஆயிரத்து 893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -