TN Corona LIVE Updates : ஐசியூ வரை சிகிச்சை பெற்றவர்கள் 4 முதல் 8 வாரம் வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளக்கூடாது
இன்றைய கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
- கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நபர்கள் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 3 மாதங்கள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளக்கூடாது.
- அதேபோல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு பிளாஸ்மா சிகிச்சை செய்து கொண்ட நபர்களுக்கும், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிய மூன்று மாதங்கள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளக்கூடாது.
- முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடுவதற்குள் கொரோனா தொற்று ஏற்பட்டால், குணமாகி மூன்று மாதங்களுக்கு பின்புதான் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும்.
- வேறு நோய்கள் காரணமாக ஐசியூ வரை சிகிச்சை பெற்றவர்கள் 4 முதல் 8 வரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள கூடாது.
மும்பையிலிருந்து 1 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தன
கொரோனா தொற்றில் இருந்து குணமானவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
நாட்டில் எஃகு ஆலைகள் தினமும் 4,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜனை தொடர்ந்து விநியோகித்து வருவதாக எஃகு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் தர்போது 48,455 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தமிழகத்திலுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க முன்வந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 4530 பேர் கொரோனா நோய்த் தோற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1291 கொரோனா இறப்புகள் ஏற்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன?
கடந்த 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்ட கொரோனா இறப்புகளுடன், முந்தைய வாரங்களில் விடுபட்ட 612 கொரோனா இறப்புகளை அம்மாநில அரசு இணைத்துள்ளது. இதன், காரணாமாக அங்கு கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த 6 நாட்களாக, நாடு முழுவதும் புதிய பாதிப்புகளை விட கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
]கடந்த 24 மணி நேரத்தில் 3,89,851 பேர் குணமடைந்துள்ளனர். நம் நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 21986363 ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் வீதம் 86.23 சதவீதமாக உள்ளது.
இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3226719 ஆக இன்று குறைந்துள்ளது . இது நாட்டின் மொத்த பாதிப்பில் 12.66% ஆகும்.
கோவிட் கால பாதுகாப்புப் பணியில் உயிர்த் தியாகம் செய்த காவல் துறையினரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தினார்
சென்னை நேரு விளையாட்டு அரங்கில், தமிழ்நாட்டிலுள்ள தனியார் மருத்துவமனைகள் அரசு இணையதளத்தின் மூலமாக ரெம்டெசிவிர் மருந்தை பதிவு செய்தவர்களுக்கு, அம்மருந்தை தனியார் மருத்துவமனைகளின் பிரநிதிகளுக்கு வழங்கும் முறையை மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மே 14 நிலவரப்படி, தமிழ்நாட்டுக்கு இதுவரை 86,55,010 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 72,91,5164 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 13,63,494 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்தின்வசம் கையிருப்பில் உள்ளன.
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், முதன்முறையாக ஒரே நாளில் 4,329 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டின் ஒருநாள் அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையை (4,249) இந்தியா முந்தியது.
கடந்தாண்டு டிசம்பர் 3ம் தேதி இந்தியாவின் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1,39,188 ஆக இருந்தது. கிட்டத்தட்ட 165 நாட்களில் இந்தியாவின் இறப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.
ரெம்டெசிவிர் தயாரிப்பு திறனை மாதத்துக்கு 1.19 கோடி குப்பிகளாக அதிகரிக்கப்படும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார். தற்போதுள்ள 7 ரெம்டெசிவிர் தயாரிப்பு நிறுவனங்களின் ஒரு மாத உற்பத்தி திறன் 38.80 லட்சம் குப்பிகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ரெம்டெசிவிர் மந்திர கோல் அல்ல. இது தொற்று அளவை குறைக்க மட்டுமே முடியும் என்று மத்திய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது. மேலும், கொரோனா நோய்த் தொற்றில் இருந்து 85 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் ரெம்டெசிவிர் சிகிச்சை இல்லாமல் குணமடைந்து வருவதாகவும் தெரிவித்தது.
தமிழ்நாடு கோவிட்- 19 மருத்துவ மேலாண்மை நெறிமுறைகளில் ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வகைகளை துல்லியமான முறையில் கண்டுபிடிக்கும் புதிய ஆர்டி-பிசிஆர் சோதனைக் கருவியை ஸ்ரீ சித்திர திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த நிறுவனம் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்குகிறது. ஆர்டிஆர்பி மற்றும் ஓஆர்எஃப்பி- என்எஸ்பி14 ஆகிய 2 சார்ஸ் கோவி 2 மரபணுக்களையும் மனித ஆர்என்ஏஎஸ்ஈபி மரபணுவையும் இந்த பரிசோதனை முறை குறி வைக்கிறது. இதன் மூலம் பல்வேறு வைரஸ் வகைகளைக் கண்டறிய முடியும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் வீடுகளை விட்டு வெளியே வருவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.
Background
நாடு முழுவதும் முதன்முறையாக நேற்று ஒரே நாளில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,22,436 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 14 நாட்களில் சராசரியாக தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை சுமார் 3,55,944 ஆக பதிவாகியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையைத் தொடங்கியுள்ளது.
இருப்பினும், தினசரி கொரோனா ஏற்படும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை அதிகைர்த்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4,329 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 38,603 பேரும், தமிழகத்தில் 33,075 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
மாநில சுயாட்சி முழக்கமும்; திமுக அமைச்சர்களின் கருத்தும்!
தடுப்பூசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், " குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யும் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம், கூட்டாண்மை அடிப்படையில் ஆக்சிஜன் தடுப்பூசிகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் உற்பத்திக்கான உட்கட்டமைப்புகளை விரைவில் நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
திமுக அரசின் செயல்பாடு; மாநில சுயாட்சியா ? மத்திய அரசு எதிர்ப்பா ?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -