Coronavirus LIVE: தமிழ்நாட்டில் இன்று 2079 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
கர்நாடகாவில் நாளை முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஜூலை 26ஆம் தேதி முதல் உயர்கல்வி நிறுவனங்களை திறக்கவும், குறைந்தபட்சம் முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்களை மட்டும் கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கவும் கர்நாடக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 40.49 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
இதுவரை 3,02,69,796 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.31 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 41,157 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,22,660 ஆகக் குறைந்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.36 சதவீதமாகும்.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து, 2.08 சதவீதமாக உள்ளது.
தினசரி தொற்று உறுதி வீதம் தொடர்ந்து 27 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.13 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 44.39 கோடியாக அதிகரித்துள்ளது
அரியானா மாநிலத்தில் ஜூலை 27ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 50% இருக்கைகளுடன் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை ஹோட்டல்கள், பார்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், இன்று (18.07.2021) மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கான தடுப்பூசி போடப்படவில்லை
கேரளா, மணிப்பூர், மிசோராம், நாகாலாந்து, அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தினசரி கொரோனா நோய்த் பரவல் அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 518 பேர் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 41,157 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42,004 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,22,660 ஆக குறைந்துள்ளது
நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40 கோடியை நெருங்குகிறது. மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இதுவரை 12,40,07,069 பேர் முதல் டோசையும், 48,50,858 நபர்கள் இரண்டாம் டோசையும் பெற்றுள்ளனர்.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, பிகார், குஜராத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் 18-44 வயது பிரிவினருக்கு 50 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியுள்ளன.
ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், தில்லி, ஹரியானா, ஜார்கண்ட், கேரளா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் கொவிட் தடுப்பு மருந்தை இது வரை வழங்கியுள்ளன.
1 | தமிழ்நாடு (18- 44 வயதுக்குட்பட்ட பயனாளிகள்) | 7142613 - முதல் டோஸ் | 325953 -இரண்டாம் டோஸ் |
Background
மூன்றாம் கட்ட தடுப்பூசி செலுத்துவது தொடங்கியதில் இருந்து 18- 44 வயதுடைய பயனாளிகளில் 12,40,07,069 பேர் முதல் டோசையும், 48,50,858 நபர்கள் இரண்டாம் டோசையும் போட்டுக் கொண்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -