Tamil Nadu Coronavirus LIVE: தமிழ்நாட்டில் ஊரடங்கு தொடர்பாக நாளை முதலமைச்சர் முக்கிய ஆலோசனை
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 4,862 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 33.57 கோடியைக் கடந்தது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 4,862 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 33.57 கோடியைக் கடந்தது.
ஊரடங்கை நீடிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நாளை ஆலோசனை. மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.
கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, பெரம்பலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, விழுப்புரம், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று இருந்ததை விட சற்று கூடுதலாகி இருக்கிறது. எனவே, கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுமா? அல்லது எஞ்சியுள்ள 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுமா? என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,616 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் சமீபத்திய, 90% புதிய பாதிப்புகள் உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்றால் எற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 652 கொரோனா இறப்புகளை ரஷ்யா பதிவு செய்துள்ளது. இது, அதிகபட்ச தினசரி கொரோனா இறப்பு எண்ணிக்கையாகும்.
இதற்கிடையே, முதல் டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பையும் ரஷ்யா உறுதி செய்துள்ளது.
டாக்டர். ரெட்டி லெபாரட்டரீஸ் நிறுவனத்தின் 'ஸ்புட்நிக் லைட்' தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு ஒப்புதல் வழங்க மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) மறுத்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, 'ஸ்புட்நிக் லைட்' தடுப்பூசியை ரஷ்யாவின் கமாலேயா மையம் (Russia’s Gamaleya Research Institute of Epidemiology and Microbiology) கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த ரஷ்ய தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் திறன் குறித்த 3ம் கட்ட பரிசோதனை மேற்கொள்ள ரெட்டி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் துறை ரீதியான நிபுணர் குழு கூட்டத்தில் இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து 49வது நாளாக, புதிய பாதிப்புகளை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 61,588 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குனம்டைந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேற்று இரண்டு லட்சத்து 50 ஆயிரம் டோஸ் கோவிட் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் நேற்று (30.06.2021) கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 224 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 266 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
முகக்கவசம் அணியாத 892 நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 77 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
’ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசியின் 3வது கட்ட பரிசோதனையை நடத்த டாக்டர் ரெட்டி லேப் நிறுவனத்திற்கு, மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி மறுப்பு
கொரோனா இரண்டாவது அலையில் 40,845 பேருக்கு மியூகோமிகோசிஸ் (கருப்பு புஞ்சை) பாதிப்பு இருப்பதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த நோய் பாதிப்பு காரணமாக, இதுவரை 3,129 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிரிவித்தது
நாடு முழுவதும், ஊரடங்கு தளர்வுகளின் போது அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டுமென்று மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் என்றும் கேட்டுக் கொண்டது.
இங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 26,000க்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்பபட்டுள்ளனர். சுமார், ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு இதுவாகும். கிட்டத்தட்ட, ஒரு வாரத்தில், நாட்டின் பாதிப்பு விகிதம் 70 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
14 மாவட்டங்களில் இன்று கொரோனா அதிகரிப்பு! தமிழ்நாடு அரசு விழிப்போடு இருக்கவேண்டும் என விழுப்புரம் நாடாளுமன்ற எம்.பி ரவிக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், " தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் நேற்றைவிட இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, பெரம்பலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, விழுப்புரம், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று இருந்ததை விட சற்று கூடுதலாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று 4512 ஆக இருந்தது அது இன்று 4506 ஆக இருக்கிறது. மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 14 மாவட்டங்களில் புதிய தொற்று அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. ஊரடங்கில் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தொற்று அதிகரித்திருப்பது தமிழ்நாடு அரசு இன்னும் விழிப்போடு இருக்கவேண்டும் என்பதையே காட்டுகிறது.
அடுத்தடுத்து இருக்கும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தொற்று கூடியிருப்பது கவனத்திற்குரியதாகும். திருவண்ணாமலையில் நேற்று 125 ஆக இருந்த புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இன்று 199 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரத்தில் 52 இல் இருந்து 65 ஆகவும் , கள்ளக்குறிச்சியில் 99 இல் இருந்து 115 ஆகவும் அதிகரித்திருக்கிறது. இந்த 3 மாவட்டங்களையும் ஒருங்கிணைந்த முறையில் கவனித்து தொற்று அதிகரிக்காமல் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இந்தியாவில் இதுவரை 45 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு 48 பேருக்கு டெல்டா ப்ளஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. அவர்களில் 20 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் டெல்டா ப்ளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அதிகமிருக்கும் மாநிலங்களாக மகராஷ்டிராவும் தமிழ்நாடும் உள்ளன.
டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவியுள்ள மாநிலங்களில் மாநில அரசுகள் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ‘மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்போர் இருக்கும் பகுதிகளை மற்றவர்கள் அணுகாதபடி தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்’ என்றும் அது கூறியுள்ளது.டெல்டா ப்ளஸ் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய பகுதிகளில் ஒன்றிய அரசு அறிவுறுத்தியபடி கூடுதலான கட்டுப்பாடுகளைத் தமிழ்நாடு அரசு விதித்துள்ளதா என்பது தெரியவில்லை.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தளர்வுக்குப் பிறகு 14 மாவட்டங்களில் தோற்று அதிகரிப்பது மிகவும் கவலைக்குரியதாகும். கொரோனா மூன்றாவது அலை எப்போது தாக்கும் என்பது தெரியாத நிலையில் இதுதொடர்பாகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து விழிப்போடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
வங்க தேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு மீண்டும் நாடு தழுவிய பொதுமுடக்கநிலையை அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 19,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஜனவரி 6ம் தேதிக்குப் பிறகு ஏற்பட்ட ஒருநாள் அதிகப்டச பாதிப்பு இதுவாகும்.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 48,786 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தொடர்ச்சியாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 61,588 பேர் குணமடைந்துள்ளனர்.
சீரம் நிறுவனத்தின் கோவாவாக்ஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைக்கு மத்திய அரசு ரத்து செய்துள்ளது. முன்னதாக,மருந்து ஒருங்குமுறை அமைப்பிடம் இருந்து அனுமதி பெற்றபின்பு, 2 -17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கப்படும் என சீரம் நிறுவனம் தெரிவித்தது. இந்த பரிசோதனையின் வெற்றியின் அடிப்படையில், இதை அவசரகாலத்தில் பயன்படுத்துவதற்கான அனுமதி கோரப்படும் என்றும் தெரிவித்தது.
Background
சீரம் நிறுவனத்தின் கோவாவாக்ஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைக்கு மத்திய அரசு ரத்து செய்துள்ளது. முன்னதாக,மருந்து ஒருங்குமுறை அமைப்பிடம் இருந்து அனுமதி பெற்றபின்பு, 2 -17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கப்படும் என சீரம் நிறுவனம் தெரிவித்தது. இந்த பரிசோதனையின் வெற்றியின் அடிப்படையில், இதை அவசரகாலத்தில் பயன்படுத்துவதற்கான அனுமதி கோரப்படும் என்றும் தெரிவித்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -