மேலும் அறிய

Vijay Modi Meeting: டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?

டெல்லியில் இன்று பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, பிரதமர், முதலமைச்சரிடம் பேசிய முதல் விஷயம் என்ன தெரியுமா.?

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றபின் முதன் முறையாக பிரதமரை சந்திக்க இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார் விஜய். தொடர்ந்து, இன்று மாலை பிரதமரை அவர் சந்தித்த நிலையில், பிரதமர் மோடி அவரிடம் முதலில் என்ன பேசினார் என்பதைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இரண்டு நாட்கள் பயணமாக இன்று காலை தனி விமானம் மூலம், சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். முதலமைச்சர் ஆனதற்குப் பின்பு அவர் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் இதுவாகும்.

தொடர்ந்து, டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு, அங்கு தமிழ்நாடு இல்லத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூங்கொத்து கொடுத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையுடன் அதிகாரிகள் தமிழ்நாடு முதலமைச்சரை வரவேற்றனர். 

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு - மோடி பேசியது என்ன.?

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்த முதலமைச்சர் விஜய், மாலை 4.30 மணி அளவில், புது டெல்லி கர்த்தவ்ய பாதையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பிரதமர் அலுவலகமான சேவா தீர்த் சென்று, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

அப்போது, முதலமைச்சர் விஜய்யை பார்த்ததும், தேர்தலில் பெற்ற வெற்றிக்காக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை கேட்டு விஜய் மகிழ்ச்சியடைந்துள்ளார். பின்னர், தமிழ்நாட்டின் பல்வேறு நலன்கள் குறித்த கோரிக்கை மனு ஒன்றை பிரதமர் மோடியிடம் அவர் வழங்கியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, வளர்ச்சித் திட்டங்களுக்கான ஒப்புதல், நீட் தேர்வு விவகாரம், மீனவர் பிரச்னை, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்டவைகள் குறித்து, சுமார் 30 நிமிடங்கள் வரை பிரதமர் மோடியிடம் விஜய் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராகுல் உள்ளிட்டோரை சந்திக்கும் முதலமைச்சர் விஜய்

இதைத் தொடர்ந்து, மாலை 6.30 மணி அளவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இரவு 7.30 மணி அளவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அவர் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதலமைச்சர் விஜய்யின் இந்த டெல்லி பயணத்தின்போது, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவையும், மத்திய அமைச்சர்கள் சிலரையும் அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதோடு, நாளைய தினத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், தனது கூட்டணி கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்தித்து பேச உள்ளதாகவும், மேலும் சில முக்கிய தலைவர்களையும் அவர் சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தனது டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு, வரும் 28-ம் தேதி சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.

 

இதையும் படிங்க: தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

வாயில் திணிக்கப்பட்ட துணி.. 3 மாத பிளான்.. ஒரு மாதமாக சித்ரவதை.. குழந்தை மரணத்தில் திருப்பம்!
வாயில் திணிக்கப்பட்ட துணி.. 3 மாத பிளான்.. ஒரு மாதமாக சித்ரவதை.. குழந்தை மரணத்தில் திருப்பம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai TN BJP Chief: மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
A Raja Slams CM Vijay: “Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
“Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
Edappadi Palanisamy: “நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
“நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
Iran on Hormuz: நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Embed widget