Breaking News LIVE: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை மூட அதிரடி உத்தரவு

Breaking News LIVE Updates in Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் ஏபிபி நாடு லைவ்ப்ளாக் மூலமாக விரைவுச்செய்திகளாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 04 Feb 2022 09:28 AM
கச்சத்தீவு தேவாலய திருவிழா விவகாரம் : வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்

பிரசித்தி பெற்ற கச்சத்தீவு தேவாலய திருவிழாவிற்கு தமிழக மீனவர்களையும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ரேஷன் பொருட்கள் தரமில்லாமல் வந்தால் கடை ஊழியர்கள் திருப்பி அனுப்பலாம் : தமிழ்நாடு அரசு உத்தரவு

ரேஷன் பொருட்கள் தரமில்லாமல் கடைக்கு வந்தால் நியாய விலைக் கடை ஊழியர்கள் பொருட்களை திருப்பி அனுப்பலாம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 



இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,49,394 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,49,394 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

டாஸ்மாக் பார்களை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு தடை சட்டம் 1937-ன்படி டாஸ்மாக் கடைகளுக்கு அங்கு விற்பனை செய்யும் மதுபானங்களை அந்த கடைகளுக்கு அருகே பார் அமைத்து பருக அனுமதி அளிக்க உரிமையில்லை. அத்துடன் அந்த பார்களில் ஸ்நாக்ஸ் விற்க மற்றும் பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை எடுக்க உரிமம் அளிக்கவும் அனுமதியில்லை. மேலும் இந்த பார்கள் அனைத்தும் தனியார்களுக்கு உரிமத்துடன் தரப்படுவதால் அதன் மீது டாஸ்மாக் கடைகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை. ஆகவே இந்த பார்களை 6 மாதங்களுக்குள் டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

Background

இன்று தமிழ்நாடு, இந்தியா, உலகம் உள்ளிட்ட முக்கிய செய்திகள்.... 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.