TN Assembly Session NEET LIVE: சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்
Tamil Nadu Assembly Special Session on NEET LIVE: நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் சிறப்பு பேரவைக்கூட்டம் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் இங்கே காணலாம்
நீட் தேர்வு கூடாது என்னும் நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருக்கிறது - எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவையில் நீட் விலக்கு ஒருமனதாக மீண்டும் நிறைவேறியது
தேர்வர்களுக்கு மறைமுகமாக அல்லது நேரடியாக உதவுவது என்பது நீட் தேர்வில் நடைமுறையாக மாறியுள்ளது - முதல்வர் ஸ்டாலின்
நீட் தேர்வு சமத்துவத்திற்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டம் கூறும் சமத்துவத்துக்கு எதிரானது நீட் - முதலமைச்சர் ஸ்டாலின்
நீட் என்பது தேர்வு அல்ல.. பலிபீடம். நீட் தேர்வுக்கு முன்பாக 90% இடங்களை மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் பெற்றுவந்தனர் - முதலமைச்சர் ஸ்டாலின்
நீட் என்பது ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக்கனவுக்கு தடுப்புச்சுவர் போடுகிறது - முதல்வர் ஸ்டாலின்
நீட் தேர்வு விவகாரத்தில் திராவிடக் கட்சிகள் ஒருமித்த கருத்துடன் உள்ளன - விஜயபாஸ்கர், அதிமுக
அதிமுக ஆட்சியில் நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை ஒரு வருடம் அதிமுக அரசு மறைத்து வைத்திருந்தது. ஆனால், திமுக அரசு உடனடியாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளது
- முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
நுழைவுத்தேர்வே வேண்டாம் என திமுக அரசுதான் சட்டம் கொண்டுவந்தது - அமைச்சர் மா.சுப்ரமணியன்
மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது - விஜயபாஸ்கர்
தமிழக மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவை ஆளுநர் நிராகரித்துள்ளார் - காங்கிரஸ்.
நீட் தேர்வு கூடாது என்பதல்ல.. நுழைவுத்தேர்வே கூடாது என்பதே நம் நிலைப்பாடு - எம்.எல்.ஏ மோகன்.
தமிழக வாழ்வுரிமை கட்சி, மமக, கொமதேக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை நீட் விலக்கு மசோதாவுக்கு இதுவரை ஆதரவளித்துள்ளன
ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்கத்தக்கதல்ல. மருத்துவம் என்பது சமூக நீதி தொடர்புடையது - மதிமுக எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமார்.
நிராகரிக்கப்பட்ட மசோதாவை நிறைவேற்ற மீண்டும் சட்டப்பேரவையில் கொண்டுவந்துள்ளனர்.எங்களது கேள்வி இது தேவைதானா?;எல்லா மாணவர்களும் சமூக நீதியுடன் பயில நீட் தேவை என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு':சட்டப்பேரவையில் இருந்து பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளியேறிய பின்னர் நயினார் நாகேந்திரன் பேட்டி
நிராகரிக்கப்பட்ட மசோதாவை நிறைவேற்ற மீண்டும் சட்டப்பேரவையில் கொண்டுவந்துள்ளனர்.எங்களது கேள்வி இது தேவைதானா?;எல்லா மாணவர்களும் சமூக நீதியுடன் பயில நீட் தேவை என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு':சட்டப்பேரவையில் இருந்து பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளியேறிய பின்னர் நயினார் நாகேந்திரன் பேட்டி
மாநில உரிமையை மீட்க கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்
சட்டப்பேரவையில் வேல்முருகன் எம்.எல்.ஏ. பேச்சு
காமாலை கண் கொண்டவர்கள் தயாரித்தது என்ற ஆளுநரின் பார்வை ஒட்டுமொத்த தமிழர்கள் விமர்சிக்கிறது - ஜவாஹிருல்லா..
’தீட்டு’ என்று சொல்லி அன்று ஒதுக்கி வைத்தார்கள், இன்று ’நீட்’ என்று சொல்லி எங்கள் மாணவர்களை ஒதுக்குகிறார்கள்
- ஜவாஹிருல்லா பேரவையில் பேச்சு
நீட் விலக்கு மசோதாவை நிராகரித்த விவகாரத்தில் ஆளுநரின் மதிப்பீடுகள் தவறானவை - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு.
கருத்துக்களை முன்வைக்கலாம். ஆளுநரை தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்கக்கூடாது. அதை அனுமதிக்கமாட்டேன் என உத்தரவிட்டார் சபாநாயகர் அப்பாவு
நீட் விலக்கை வலியுறுத்தும் அறிக்கை குறித்து ஆளுநர் அளித்த அறிக்கை வாசித்து வருகிறார் சபாநாயகர் அப்பாவு.
கடந்த 11 ஆண்டுகளில், சிறப்பு சட்டபேரவைக் கூட்டம் கூட்டப்படுவது இதுவே 5-வது முறையாகும்
நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பிய ஆளுநர், காமாலை கண் கொண்டவர் தயாரித்ததுபோல அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தது பேசுபொருளாகியுள்ளது
இன்னும் சற்று நேரத்தில் கூடுகிறது சிறப்பு சட்டப்பேரவைக்கூட்டம்.. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக இது கருதப்படுகிறது
Background
Tamil Nadu Assembly Session on NEET LIVE:
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 5-ந் தேதி சிறப்பு அனைத்துக்கட்சி கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிலையில், நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக இன்று சட்டமன்ற பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மீண்டும் நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தக்கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -