Breaking News LIVE : மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு - நொடிக்கு நொடி நிகழ்வுகள்!

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 07 Jul 2021 07:44 PM
தமிழ்நாட்டின் எல்.முருகன் மத்திய அமைச்சரானார்!

தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத்தலைவராகப் பதவி வகித்தவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். 44 வயதான எல்.முருகன் தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராகப் பொறுப்பு வகிப்பவர்.



2 ரூபாய் டாக்டர் முன்ஜபரா மகேந்திரபாய் அமைச்சராகப் பதவியேற்பு!

குஜராத் மாநிலத்திலிருந்து முதன்முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அந்த மாநிலத்தின் எளிய மக்களுக்கு குறைந்த பணத்தில் சேவை செய்யும் 2 ரூபாயாக அறியப்பட்டவர். 

சாந்தனு தாக்கூர் அமைச்சராகப் பதவியேற்பு!

சாந்தனு தாக்கூர் 38 வயது நிரம்பியவர். மேற்கு வங்கத்தின் மத்துவா சமூகத்தின் தலைவர். அந்த மாநிலத்திலிருந்து முதன்முறையாக எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.அந்த மாநில முன்னாள் அமைச்சர் மஞ்சுள் கிருஷ்ணா தாக்கூரின் மகன். 

எய்ம்ஸ் மருத்துவர் அமைச்சரானார்!

மேற்கு வங்கத்திலிருந்து முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட டாக்டர் சுபாஷ் சர்கார் அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவர் மேற்கு வங்க எய்ம்ஸ் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றியவர். 

திரிபுராவின் பிரதிமா பவுமிக் அமைச்சராகப் பொறுப்பேற்றார்!

மிக எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து அரசியலுக்கு  வந்தவர் பிரதிமா. திரிபுரா பல்கலைக்கழகத்தில் உயிர் அறிவியல் பட்டப்படிப்பு முடித்தவர். 

கர்நாடகாவிலிருந்து இதுவரை நான்கு பேர் அமைச்சரகளாகப் பொறுப்பேற்பு

கர்நாடக மாநிலத்திலிருந்து இதுவரை ராஜீவ் சந்திரசேகர் , ஏ.நாராயணஸ்வாமி, ஷோபா கரண்ட்லாஜே, பகவந்த் கூபா ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.

சவுஹான் தேவுசின் அமைச்சராகப் பொறுப்பேற்பு

குஜராத் மாநிலத்திலிருந்து 2வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சவுஹான் தேவுசின் அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவர் அகில இந்திய வானொலியின் முன்னாள் பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேகி அமைச்சரானார்

உச்சநீதிமன்ற வழக்கறிஞர், சமூக சேவகர் மீனாட்சி லேகி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.புதுடெல்லி 2வது முறையாக எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  



குஜராத்தின் தர்ஷனா விக்ரம் ஜார்தோஷ்

குஜராத் சமூக நலவாரிய உறுப்பினராக இருந்த தர்ஷனா ஜார்தோஷ் அமைச்சராகப் பதவியேற்றார். அந்த மாநிலத்திலிருந்து 3 முறை எம்.பி.யாகத் தேர்வானவர். 

உ.பி.யின் பானு பிரதாப் சிங் வர்மா அமைச்சராகப் பொறுப்பேற்பு!

அமைச்சராகப் பொறுப்பேற்கும் பானு பிரதாப் சிங் வர்மா வழக்கறிஞர், உத்திரபிரதேச மாநில  எம்.எல்.ஏவாகப் பதவி வகித்தவர் அந்த மாநிலத்திலிருந்து 5 முறை எம்.பியாகத் தேர்வு செய்யப்பட்டவர். 

முதல் அமைச்சரவை விரிவாக்கத்தின் முதல் பெண் அமைச்சர் பதவியேற்பு!

மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த அனுபிரியா சிங் படேல் விரிவாக்கப்படும் மோடி அமைச்சரவையின் முதல் பெண் அமைச்சராகப் பதவியேற்கிறார். உத்திரப்பிரதேசத்திலிருந்து 2வது முறையாக எம்.பி.யானவர்.

அனுராக் சிங் தாக்கூர் பதவியேற்பு!

நிதித்துறை இணையமைச்சராக இருந்த அனுராக் சிங் தாக்கூர் பிரதமர் மோடி கேபினேட்டின் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றார். 



உள்துறை இணையமைச்சராக இருந்த கிஷண் ரெட்டி அமைச்சராகப் பதவியேற்பு

மத்திய அமைச்சரவையில் உள்துறை இணையமைச்சராக இருந்த கங்காபுரம் கிஷண் ரெட்டி கேபினெட்டின் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அமைச்சர்களாகப் பொறுப்பேற்கும் இணையமைச்சர்கள்!

பாஜக அரசு அமைச்சரவையில் கப்பல் போக்குவரத்து இணை அமைச்சராக இருந்த மன்சுக் மாண்டவ்யா,வேளாண் துறை இணை அமைச்சராக இருந்த பர்ஷோத்தம் ரூபாலா மற்றும்  
வீட்டு வசதித் துறை இணை அமைச்சராக இருந்த ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். இதுவரை பொறுப்பேற்ற அமைச்சர்கள் மூன்று முறைக்கு மேல் நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

கிரண் ரிஜிஜூ அமைச்சராகப் பதவியேற்பு!

மத்திய அமைச்சரவையில் விளையாட்டுத்துறை இணை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ விரிவாக்கம் செய்யப்படும் புதிய அமைச்சரவையிலும் அமைச்சராகப் பதவியேற்பு

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ராம் பிரசாத் சிங் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் அமைச்சர்களாகப் பதவியேற்பு

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பீகாரின் ராம் பிரசாத் சிங் மற்றும்  ஒடிசாவின் அஸ்வினி வைஷ்ணவ் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்

ஜோதிராதித்ய சிந்தியா அமைச்சராகப் பதவியேற்பு

மத்தியபிரதேசத்திலிருந்து ஐந்து முறை மாநிலங்களவைக்குட் தேர்வான முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிராத்திய சிந்தியா பாஜக அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்பு.

மத்தியபிரதேசத்தின் டாக்டர் வீரேந்திர குமார் பதவியேற்பு

மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணை அமைச்சராக இருந்தவர் வீரேந்திர குமார்

சர்பானந்த சோனாவால் அமைச்சராகப் பொறுப்பேற்பு

அசாமிலிருந்து 2 முறை எம்.பி.யாகத் தேர்வான சர்பானந்த சோனாவால் அமைச்சராகப் பதவியேற்கிறார். இவர் மத்திய அமைச்சரவையில் விளையாட்டுத் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தவர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு

43 புதிய அமைச்சர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்கின்றனர். மகாராஷ்டிராவின் நாராயண் தாட்டு ரானே முதலாவதாகப் பதவியேற்கிறார்.

ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா

இன்று மாலை 6 மணிக்கு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா செய்துள்ளனர்

ஆலோசனைக்கு முன் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள்

14 பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள்

புதிய அமைச்சரவைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள புதிய அமைச்சர்களில் 14 பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள்

43 புதிய அமைச்சர்கள் பட்டியல்

மத்திய அமைச்சராகிறார் எல்.முருகன்

தமிழ்நாடு பாஜக தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 11 மார்ச், 2020 அன்று நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு 15 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் கொண்டவர்

புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு

மத்திய பாரதிய ஜனதா அரசு தனது புதிய அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த எல்.முருகன் இதில் மத்திய அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

12 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா - 43 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு ?

இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் குழந்தை - பெண்கள் நலத்துறை அமைச்சர் தபாஸ்ரீ சவுத்ரி, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். 43 புதிய மத்திய அமைச்சர்கள் இன்று மாலை 6 மணிக்கு பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ராஜினாமா

இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ராஜினாமா செய்துள்ளார்.

எல். முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி?

தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: பிரதமர் வீட்டில் எம்.பி.,க்கள்!

மத்திய அமைச்சரவையில் இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், உ.பி.,யைச் சேர்ந்த அனுப்பிரியா படேல், வருண் காந்தி, நிஷாத் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. அதே போல் ராம்விலாஸ் பாஸ்பான் சகோதரர் பசுபதி பாரஸ், ஜோதிதிராதித்யா சிந்தியா உள்ளிட்ட பலருக்கு விரிவாக்கத்தில் வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனை பிரதமர் மோடி இல்லத்தில் துவங்கியுள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷா இதில் பங்கேற்கிறார். அமைச்சரவை விரிவாக்கத்திற்காக பிரதமர் மோடி வீட்டில் எம்.பி.,கள் குவிந்துள்ளனர். ஆலோசனைக்கு பின் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

திருக்குவளை கருணாநிதி இல்லத்தை குடும்பத்துடன் முதல்வர் பார்வையிட்டார்

திருவாரூரில் உள்ள திருக்குவளையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இல்லத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். ஆட்சிப்பொறுப்பேற்ற பின் முதல்முறையாக குடும்பத்துடன் திருக்குவளை சென்ற நிலையில் முதல்வர் பார்வையிட்டார்.

திருவாரூர் அரசு மருத்துவமனையில் தாய் சேய் நலப் பிரிவு கட்டடம் திறப்பு

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய் சேய் நலப் பிரிவு கட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 4 அறுவை சிகிச்சை மையம் மற்றும் 250 படுக்கை வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

Background

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.     

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.