Breaking Live: உத்தரகாண்ட் புதிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உத்தரகாண்ட் மாநில பாஜக சட்டமன்றக்கட்சி தலைவராக புஷ்கர் சிங் தாமியை எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். தீரத்சிங் ராவத் ராஜினாமா செய்த நிலையில் டேராடூனில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டார். பதவியேற்று 6 மாதத்தில் எம்ஏவாக தேர்வாக முடியாத சூழல் ஏற்பட்டதால் தீரத் சிங் ராஜினாமா செய்தார்.
புனே மாவட்டத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட SARS-CoV2 IgG ஆன்டிபாடிகளைக் கண்டுபிடிப்பதற்கான தமிழ்நாடு சீரோசர்வேலன்ஸ் ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், புனே மாவட்டத்தில் 6- 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
தருமபுரி மாவட்டத்திற்கு தற்போது வரை கோவிட் தடுப்பூசிகள் வரப்பெற்ற விவரம் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் விவரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
18- 44வயதுக்குட்பட்ட பயனாளிகளில் வெறும் எட்டு பேருக்கு மட்டுமே கோவிஷீல்டு இரண்டாம் தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு விகிதம் 13 சதவிகிதமாக குறைந்துள்ளது.
சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி உட்பட 16 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கக்கூடிய ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீது வெளிநாட்டு வாழ் பெண் ஒருவர் அளித்த புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் இரண்டாம் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த வழக்கில் தற்போது சிபிசிஐடி போலீஸ் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடியை புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து வரும் நிலையில், புதுச்சேரியை தொடர்ந்து தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ.,க்கள் சற்று முன் சந்தித்தனர். தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் சென்ற அவர்கள், பிரதமர் மோடியுடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வயிற்று வலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சசிகலா மீது சி.வி.சண்முகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் சசிகலா மீதுவழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 31 ,2012ம் ஆண்டில் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 126 ஜெட் ரபேல் போர் விமானங்களை வாங்குவது என்றும். இவற்றில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்கான தொழில்நுட்பத்தை டஸ்ஸால்ட் நிறுவனம் வழங்க இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் (ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்) விமானங்களை உற்பத்தி செய்யும் என முடிவானது. இதன்படி ஹெச்ஏஎல் – டஸ்ஸால்ட் இரு நிறுவனங்கள் இடையேயான வேலை ஒப்பந்தம் 2014 மார்ச்சில் கையெழுத்தானது. பின்பு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் 2015ம் ஆண்டு ஏப்ரலில் தலைமை அமைச்சர் மோடி அவர்கள் முன்பு எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக அறிவித்து, 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவித்தார் அன்றைய பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த மனோகர் பாரிக்கர் முன்னிலையில் 2016 செப்டம்பரில் ரிலையன்ஸ்-டஸ்ஸால்ட் நிறுவனங்களுக்கிடையில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதிய ஒப்பந்தத்தின் கீழ், இந்திய பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல்- க்குப் பதிலாக எந்த அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனம் ஏன் சேர்க்கப்பட்டது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு , " ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தை இந்தியக் கூட்டாளியாகத் தேர்வுசெய்ததில் முறைகேடு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்திய விமானப் படைக்கு 36 போர் விமானங்களை 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக பிரெஞ்சு நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் இடைத்தரகர் ஒருவருக்கு ஒரு மில்லியன் யூரோ தொகையை அன்பளிப்பு வழங்கியதாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீடியாபார்ட் (Mediapart) என்ற செய்தி நிறுவனம் மேற்கொண்ட புலன் விசாரணையில், " செப்டம்பர் 23, 2016 அன்று ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தான பின்பு, டஸ்ஸால்ட் நிறுவனம் இந்தியாவில் உள்ள அதன் துணை ஒப்பந்தக்கார நிறுவனங்களில் ஒன்றான Defsys Solutions (டெஃப்சிஸ் சொல்யூஷன்ஸ்)- க்கு பெருந்தொகையை அளிக்க ஒப்புக் கொண்டது. 2018 அக்டோபர் மாத நடுப்பகுதியில், பிரெஞ்சு ஊழல் தடுப்பு முகமை இந்த பணப் பரிமாற்றத்தைக் கண்டறிந்து, டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.
ரஃபேல் போர் விமானங்களின் 50 பிரதி மாதிரிகளை தயாரிக்கும் பொருத்து பணம் செலுத்தப்பட்டதாக டஸ்ஸால்ட் நிறுவனம் தனது பதிலில் தெரிவித்ததாகவும், ஆனால், அதற்கான ஆதராங்களை நிறுவனத்தால் சமர்பிக்க முடியவில்லை என்று மீடியாபார்ட் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனது சொந்த விமான மாதிரிகளை 20,000 ( 50 மாதிரிகள்) யூரோ மதிப்பில் தயாரிக்க ஒரு இந்திய நிறுவனத்தை நாடியது ஏன்? போன்ற கேள்விகளுக்கு டஸ்ஸால்ட் நிறுவனம் முறையாக பதில் அளிக்கவில்லை. மாதிரிகள் எப்போதுமே தயாரிக்கப்பட்டன என்பதை நிரூபிக்க ஒரு புகைப்படத்தை கூட நிறுவனத்தால் காட்ட முடியவில்லை என்றும் மீடியாபார்ட் தனது கட்டுரையில் தெரிவித்தது.
7.8 பில்லியன் யுரோ மதிப்பில் பிரான்ஸ் அரசுடன் 36 ரபேல் ரக விமானங்களை வாங்குவதற்கான அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் முறைகேடு தொடர்பான விசாரணையை பிரான்ஸ் நாட்டின் பொருளாதார குற்றப்பிரிவுத் துறை முடிக்கிவிட்டுள்ளது. இந்த குற்றவியல் வழக்கை விசாரிக்க நீதிபதி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Background
உத்தரகாண்ட் மாநில பாஜக சட்டமன்றக்கட்சி தலைவராக புஷ்கர் சிங் தாமியை எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். தீரத்சிங் ராவத் ராஜினாமா செய்த நிலையில் டேராடூனில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டார். பதவியேற்று 6 மாதத்தில் எம்ஏவாக தேர்வாக முடியாத சூழல் ஏற்பட்டதால் தீரத் சிங் ராஜினாமா செய்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -