Breaking | யூனிட்டி - 22 விண்கலத்தில் விண்வெளி புறப்பட்ட மனிதர்கள்

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 11 Jul 2021 08:37 PM
யூனிட்டி - 22 விண்கலத்தில் விண்வெளி புறப்பட்ட மனிதர்கள்

அமெரிக்க தனியார் நிறுவனத்தின் யூனிட்டி-22 விண்கலம் மூலம் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்ஸன் உள்பட 5 பேர் கொண்ட குழு விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றது.  ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளி பெண் ஸ்ரீஷா பாண்ட்லா விண்கலத்தில் சென்றுள்ளார்.

சென்னையில் பரவலாக மழை

சென்னை கே.கே.நகர், ராமாபுரம், சித்தாலபாக்கம், தாம்பரம், அனகாபுத்தூர், வண்டலூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


 

இன்று மாலை 6 மணிக்கு ’வலிமை’ ஃபர்ஸ்ட் லுக்

இன்று மாலை 6 மணிக்கு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் வடிவில் வெளியாகிறது. இரண்டு காத்திருப்புக்கு பின் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்று மாலை முடிவுக்கு வருகிறது. பிரதமரின் சென்னை வருகை, சென்னை டெஸ்ட் போட்டி, கால்பந்து போட்டியில் வலிமை அப்டேட் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.

நிவாரண நிதி வழங்கினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை முதல்வரிடம் வழங்கினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்திந்து வருகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்..!

 தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்திந்து வருகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின். தேமுதிக தலைவரைச் சந்தித்து அவரது உடல்நலனை விசாரிக்கிறார். கூடுதல் விவரங்களுக்கு இணைந்திருங்கள்

கோபா அமெரிக்கா கால்பந்து - பிரேசிலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா
47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது. அதில் இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் அர்ஜென்டினாவும், பிரேசிலும் மோதின.

 

விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதியின் 22-வது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதனால் முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது.

 

இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதன்மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.
கோபா அமெரிக்கா - பிரேசிலை வீழ்த்தி கோப்பை வென்றது அர்ஜென்டினா..!

கோபா அமெரிக்கா - பிரேசிலை வீழ்த்தி கோப்பை வென்றது அர்ஜென்டினா..!

Background


தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்ததன் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.