மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் சந்திரநாத் ரத் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பதற்றத்தை தணிக்க மேற்கு வங்க மாநிலம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Continues below advertisement

கடந்த ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29ம் தேதிகளில் மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 293 தொகுதிகளில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடர்ந்து 3 முறை ஆட்சியில் இருந்த மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு முடிவு கட்டப்பட்டிருக்கிறது.

இதில் பானிபூர் தொகுதியில் போட்டியிட்ட மமதா பானர்ஜியே பாஜக மாநில தலைவர் சுவந்து அதிகாரியிடம் சுமார் 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி அதிர்ச்சி கொடுத்தார். இந்த நிலையில் அங்கு அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தாங்கள் வேண்டுமென்றே தோற்கடிக்கப்பட்டுள்ளதாக மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ள நிலையில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் எனவும் விடாப்பிடியாக கூறியுள்ளார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Continues below advertisement

சுவேந்து அதிகாரி பிஏ சுட்டுக்கொலை

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆன நிலையில் மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர்  சந்திரநாத் ரத் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். காரில் அவர் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கும்பல் ஒன்று அவரை கொன்றுள்ளது. இந்த சம்பவம் மத்யம்கிராமில் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் ஓட்டுநரான புத்ததேப் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் திரிணாமூல் காங்கிரஸுக்குத் தொடர்பு இருப்பதாக சுவேந்து அதிகாரியின் சகோதரர் திப்யேந்து அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். 

திரிணாமூல் காங்கிரஸால் இத்தனை ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வரும் வன்முறைக் கலாச்சாரத்தின் அறிகுறியே இந்தச் சம்பவம். அதனால் தான்  சந்திரநாத் ரத் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்திய விமானப்படையில் பணி செய்தவர்

இந்திய விமானப்படையில் பணியாற்றிய சந்திரநாத் ரத் பூர்வா மேதினிபூர் மாவட்டத்தின் சந்திப்பூரை பூர்வீகமாகக் கொண்டவர். விமானப்படையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு  படிப்படியாக அரசியலுக்குள் நுழைந்தார். மம்தா பானர்ஜி அரசில் சுவேந்து அதிகாரி அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் இவர் பணியில் சேர்ந்துள்ளார். சுவேந்து பாஜகவுக்கு அணி மாறியபோது தனிப்பட்ட செயலாளராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் அவர் கொலை திட்டமிட்டப்பட்ட ஒன்று எனவும், காவல்துறை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் நிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள், கொலையை நிகழ்த்துவதற்கு முன்பாக அப்பகுதியை முன்கூட்டியே நோட்டமிட்டு, தப்பிக்கும் வழியையும் கண்டறிந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒரு கார் மற்றும் ஒரு பைக்கில் கொலை செய்த கும்பல் வந்துள்ளது. சந்திரநாத் ரத் காரில் சென்ற நிலையில் அந்த கும்பலின் கார் முந்தி சென்று இவர் பயணித்த காரின் வேகத்தை குறைக்கச் செய்துள்ளது. பைக்கில் வந்தவர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.