பஞ்சாப்பில் பிரதமர் பாதுகாப்பு குறைபாடு தொடர்பான ஆணையத்தின் விசாரணை குழு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்..


பஞ்சாப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக விசாரணை செய்ய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பஞ்சாப் உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர், பஞ்சாப் டிஜிபி, சண்டிகர் டிஜிபி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளர், என்ஐஏ இயக்குனர், பஞ்சாப் பாதுகாப்பு இயக்குனரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.