தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சென்னையைச் சேர்ந்த மாணவி அவரது அறையில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ( National Law University) மூன்றாம் அண்டு எல்.எல்.பி. பயின்று வந்த மாணவியின் உடல் விடுதியில் அவரது அறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதோடு, மாணவி எழுதிய கடிதத்தையும் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். 


இந்த சம்பவம் தொடர்பாக புகார் பெற்ற பிறகு அந்நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை மேற்கொண்டனர். கூடுதல் டி.சி.பி. துவாரகா நிஷாந்த் குபதா தெரிவிக்கையில்,” சென்னையைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார். அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின், அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும். இது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்படும். கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த மாணவி அவரது நண்பர்களிடம் தனக்கு ஏற்பட்ட தற்கொலை எண்ணங்கள் பற்றி பேசியிருக்கிறார். அப்போது அவரது நண்பர்கள் மாணவியை சொந்த ஊரான சென்னைக்கு ஒரு வாரம் அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.” என்று தெரிவித்தார்.


அந்த மாணவி கடிதத்தில்,’ நான் தற்கொலை செய்து கொண்டதற்கு யாரும் காரணம் இல்லை. இப்படியான ஒரு முடிவு எடுத்ததற்கு பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். 


இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், ”எங்கள் பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரிய இழப்பு. வருத்தத்தைத்தெரிவித்து கொள்கிறோம். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருக்கு இடர் காலத்தில் எங்கள் இரங்கலை தெரிவிக்கிறோம். மாணவர்களின் நலனை பாதுகாப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். “ என்று தெரிவித்துள்ளது. தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Suicidal Trigger Warning.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104. சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ.புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)