மேலும் அறிய

வேலைநிறுத்தம்: தமிழகத்தில் வங்கி, போக்குவரத்து முடங்குமா? 12 முக்கிய கோரிக்கைகள் & விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு!

சுமார் 10-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அறிவித்துள்ள இந்த பாரத் பந்த், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்குமா என்ற கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.

விலைவாசி உயர்வு, குறைந்தபட்ச ஊதியம், புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிப் பணிகள் முடங்குமா? பேருந்துகள் மற்றும் ரயில்கள் வழக்கம் போல் இயங்குமா? அத்தியாவசிய தேவைகளான பால், மருந்து கடைகள் திறந்திருக்குமா? என பல கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் இதில் பங்கேற்பதால் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன? இந்த போராட்டத்தின் பின்னணியில் உள்ள 12 முக்கிய கோரிக்கைகள் எவை? எதற்கெல்லாம் விடுமுறை, எதெல்லாம் இயங்கும் என பார்க்கலாம்.


வேலைநிறுத்தம்: தமிழகத்தில் வங்கி, போக்குவரத்து முடங்குமா? 12 முக்கிய கோரிக்கைகள் & விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு!

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 10 முக்கிய மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் இணைந்து இன்று பிப்ரவரி 12 ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்த போராட்டத்தில் INTUC, AITUC, HMS, CITU, LPF (தமிழகத்தின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம்) உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புகள், இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றன. இவர்களுக்கு ஆதரவாக சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) மற்றும் அகில இந்திய கிசான் சபா போன்ற விவசாய அமைப்புகளும் களமிறங்க உள்ளது.

மத்திய அரசு 29 பழைய தொழிலாளர் சட்டங்களை நீக்கிவிட்டு கொண்டுவரப்பட்ட 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்பது இவர்களின் முதல் கோரிக்கை. இது வேலை பாதுகாப்பை குறைக்கும் என அஞ்சுகின்றனர்.

அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் மற்றும் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உறுதி செய்ய வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்தி, அதன் கீழ் வேலை உத்தரவாதத்தை அதிகரிக்க வேண்டும். புதிய விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மிஷன் 2025 சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

மின்சாரத் திருத்த சட்டம் (Electricity Amendment Bill) மற்றும் சாந்தி' (SHANTI) சட்டம் போன்ற புதிய மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும்.


வேலைநிறுத்தம்: தமிழகத்தில் வங்கி, போக்குவரத்து முடங்குமா? 12 முக்கிய கோரிக்கைகள் & விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு!

விக்சித் பாரத் - கிராமின் மிஷன் 2025 சட்டத்தை ரத்து செய்து, இளைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி செய்யப்பட உள்ளது.

இந்த போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாயிகள் இந்த பந்த்திற்கு முழு அடைப்பு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் பொதுத்துறை வங்கி சங்கங்களும் இணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. இருப்பினும் வங்கிகள் அதிகாரப்பூர்வ விடுமுறை எதுவும் அறிவிக்கவில்லை. இருப்பினும் ஊழியர்கள் இந்த போராட்டத்தில் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதால், வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மற்றபடி பேருந்துகள், பள்ளிகள், பிற சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Iran Dubai Airport Attack: துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
Top 10 News Headlines: சிபிஐ-யிடம் விஜய் கோரிக்கை, ட்ரம்ப்புக்கு நோ சொன்ன நாடுகள், நெதன்யாகு புதிய வீடியோ போலியா.? - 11 மணி செய்திகள்
சிபிஐ-யிடம் விஜய் கோரிக்கை, ட்ரம்ப்புக்கு நோ சொன்ன நாடுகள், நெதன்யாகு புதிய வீடியோ போலியா.? - 11 மணி செய்திகள்
Towel Dance: துண்டை கட்டிக்கொண்டு ஆடிய பள்ளி மாணவிகள்.. இணையத்தை ஆட்டம் காண வைத்த வீடியோ!
Towel Dance: துண்டை கட்டிக்கொண்டு ஆடிய பள்ளி மாணவிகள்.. இணையத்தை ஆட்டம் காண வைத்த வீடியோ!
சம்ருதி SM 46 லாட்டரி: ரூ.1 கோடி பரிசு யாருக்கு? அதிர்ஷ்டசாலி யார்? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
சம்ருதி SM 46 லாட்டரி: ரூ.1 கோடி பரிசு யாருக்கு? அதிர்ஷ்டசாலி யார்? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin warns DMK leaders : குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
கட்சியில் குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
Iran Dubai Airport Attack: துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
TVK Alliance : பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.! கூட்டணிக்கு டாடா காட்டிய விஜய்- பரபரப்பு அறிக்கை
பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.!கூட்டணிக்கு டாடா காட்டிய விஜய்- பரபரப்பு அறிக்கை
Netanyahu New Video: என்னாது.! நெதன்யாகுவோட புது வீடியோவும் போலியா.?! மீண்டும் ஆதாரங்களை அடுக்கும் நெட்டிசன்கள்
என்னாது.! நெதன்யாகுவோட புது வீடியோவும் போலியா.?! மீண்டும் ஆதாரங்களை அடுக்கும் நெட்டிசன்கள்
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
DMK alliance seat allocation : திமுக பிளானால் திடீர் ட்விஸ்ட்.! தேமுதிக,விசிக, கம்யூனிஸ்ட்க்கு இத்தனை தொகுதிகள் தானா.?
திமுக பிளானால் திடீர் ட்விஸ்ட்.! தேமுதிக,விசிக, கம்யூனிஸ்ட்க்கு இத்தனை தொகுதிகள் தானா.?
Embed widget