தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில்  ராமனுஜரின் 216 அடி சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. 11ஆம் நூற்றாண்டின் பக்தி துருவி ராமானுஜரை கௌரவிக்கும் வகையில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இதற்கு சமுத்துவத்திற்கான சிலை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் பஞ்சலோகத்தால் ராமானுஜருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. 45 ஏக்கர் பரப்பளவில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் இந்தச் சிலையை தற்போது பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்காக நடைபெற்று வரும் சிறப்பு யாகசால பூஜைகளில் பிரதமர் மோடி பங்கேற்று உள்ளார். அதன்பின்னர் அவர் ராமானுஜரின் 216 அடி சிலையை திறந்து வைத்தார். மேலும் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த இடத்தில் அமைந்துள்ளவற்றையும் அவர் பார்த்தார். 11ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் பிறந்தவர் ராமானுஜர். ராமானுஜரின் 1000ஆவது பிறந்த ஆண்டை கொண்டாடும் வகையில் தெலங்கானா மாநிலத்தில் சில கொண்டாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 






அதன் ஒருபகுதியாக 2014ஆம் ஆண்டு முதல் இந்த சிலைக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த சிலை 5 பஞ்ச லோக உலோகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்டவற்றால் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ராமானுஜர் சிலை 120 கிலோ தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ராமானுஜர் 120 வருடம் உலகத்தில் வாழ்ந்ததை குறிக்கும் வகையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் 108 திவ்ய தேசங்களை குறிக்கும் வகையில் சில அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 


உலகிலேயே அமர்ந்து இருக்கும் வகையில் உருவாக்கப்பட்ட  சிலைகள் இது இரண்டாவது உயரமானது. தாய்லாந்து நாட்டில் அமர்ந்த வடிவில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தை ராமானுஜரின் சிலை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 










மேலும் படிக்க: "1.54 கோடி ரூபாய்.. துப்பாக்கி, ரிவால்வர்.." : யோகி ஆதித்யநாத் சமர்ப்பித்த சொத்து விவரங்கள்..