இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது.  குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

Continues below advertisement

இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். ரயில் பயணிகளுக்காக அவ்வப்போது பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது ரயில்வே நிர்வாகம். இந்த நிலையில் தற்போது சபரிமலை சீசனையொட்டி பக்தர்களின் வசதிக்காக 204 சிறப்பு ரயில் சேவை​களை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறி​வித்​துள்ளது. கோட்​டயம், செங்​கண்​ணூர், எர்​ணாகுளம் ரயில் நிலையங்​களில் தங்​கு​வதற்​கான வசதி​களும் செய்​யப்​பட்​டுள்ளன.

Continues below advertisement

சபரிமலை ஐயப்​பன் கோயிலுக்​குச் செல்​லும் பக்​தர்​களின் வசதிக்​காக தெற்கு ரயில்வே ஏற்​பாடுகளைச் செய்​துள்​ளது. நெரிசலைத் தவிர்க்க, அதிக அளவில் சிறப்பு ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. சென்னை - கொல்​லம், திரு​வனந்​தபுரம் - மங்​களூரு, பன்​வெல் - கோட்​டயம், விசாகப்​பட்​டினம் - கொல்​லம், ஹைத​ரா​பாத் - கொல்​லம், விஜய​வாடா - கோட்​டயம் ஆகிய வழித்​தடங்​களில் இந்த ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. நவ.23-ம் தேதி 204 சிறப்பு ரயில்கள் அறி​விக்​கப்​பட்​டுள்​ளன. பயணிகளின் தேவைக்​கேற்ப மேலும் பல ரயில்​கள் இயக்​கப்​பட உள்​ளன.

பக்​தர்​கள் அதி​கம் வந்து செல்​லும் கோட்​டயம், செங்​கண்​ணூர், எர்​ணாகுளம் ரயில் நிலை​யங்​களில் சிறப்பு ஏற்​பாடுகள் செய்​யப்​பட்​டுள்​ளன. கோட்​டயத்​தின் பிரதான நுழைவாயில் அருகே 900 பக்​தர்​கள் தங்​கும் வகை​யில் 20 கழிப்​பறைகள், குளியலறைகள், உடைமை​கள் வைக்​கும் அறை, உணவருந்​தும் கூடங்​கள், செல்​போன் சார்​ஜிங் வசதி​களு​டன் 3 மாடி பக்​தர்​கள் சேவை மையம் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

செங்​கண்​ணூரில் 600 பயணிகள் தங்​கும் வகை​யில் 3 விசாலமான தங்​குமிடங்​கள், புதிய சைவ உணவகம் அமைக்​கப்​பட்​டுள்​ளன. எர்​ணாகுளம் சந்​திப்பு நிலை​யத்​தில் ஏசி காத்​திருப்பு அறைகள், ஓய்​வறைகள், உணவகங்​கள், தற்​காலிக கழிப்​பறை வசதி​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

கோட்​டயம், செங்​கண்​ணூர் ரயில் நிலை​யங்​களில் ஆர்​பிஎஃப் போலீ​ஸாரின் உதவி மையங்​கள், கூடுதல் டிக்​கெட் கவுன்ட்​டர்​கள் திறக்​கப்​பட்​டுள்​ளன. பக்​தர்​களுக்கு உதவ தமிழ், தெலுங்கு, கன்​னடம் தெரிந்த ரயில்வே ஊழியர்​கள் பணி​யமர்த்​தப்​பட்​டுள்​ளனர். பெண் காவலர்​கள் உள்​பட கூடுதல் ஆர்​பிஎஃப் போலீ​ஸார் கண்​காணிப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.