பிரபல பின்னணி பாடகர் எடவா பஷீர் ( Edava Basheer) மேடையில் பாடிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
பிரபல மலையாளப் பின்னணிப் பாடகர் எடவா பஷீர். இவர் மலையாளத்தில் பாடிய பாடல்கள் சிறப்பானவை. பல ஹிட்டான பாடல்களை திரையுகிற்கு வழங்கிய இவர், ஆழப்புழையில் உள்ள Camelot Convention Centre- இல் நடந்த இசை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ‘ப்ளூ டைமண்ட்ஸ்’ (Blue Diamond Orchestra) என்ற இசைக்குழு தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அதில் ஒருவராக இருந்து வந்தவர். இந்த இசைக்குழுவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்திற்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபப்ட்டிருந்தது.
இந்த இசை நிகழ்ச்சியில், கே.ஜே.யேசுதாஸ் பாடிய ’Mano hei tum’ என்ற இந்தி பாடலை எடவா பஷீர் மேடையில் ரசித்து பாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
பஷீரை, ஏற்பட்டாளர்கள் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுசென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பார் என்று சொல்லப்படுகிறது. அவரது உடல் ஆழப்புழையில் இருந்து அவருடைய சொந்த ஊரான கொல்லம் கடப்பக்கடாவுக்கு இறுதி அஞ்சலி மற்றும் இறுதிச்சடங்கிற்காக கொண்டு செல்லப்பட்டது.
இவர் கேரள இசைக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவராகப் பணியாற்றி இருக்கிறார். பஷீர் மறைவுக்குத் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றர்.
புதிய குரோம்புக்கில் இதெல்லாம் இருக்கா? கூகுள் வெளியிட்ட அதிரடி அப்டேட்ஸ்… என்னென்ன அம்சங்கள்?
உணவு டெலிவரி டூ ஐடி ஊழியர்.. பார்ட் டைம் வேலையும் படிப்பும்! பெங்களூர் இளைஞரின் கதை!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்