சிக்கிமில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் பிரபல சுற்றுலா பகுதி நாதுலா மலை முகடுகள். இது சீன எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு மார்ச் மாதங்களில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும். இதனால், நாதுலாவுக்குச் செல்லும் ஜெ.என். சாலையில் சுற்றுலாப் பயணிகள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், அப்பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 50-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ துறையினர், உள்ளூர் காவல் துறையினர் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிப்பு விவரம் குறித்து முழு விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர்.
மேலும் வாசிக்க...
இதையும் படிங்க..
Sanjita Chanu: ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி; 4 ஆண்டுகள் போட்டியில் விளையாடத் தடை..!