கொரோனா சூழ்நிலையில் நைரோபி ஃப்ளை என்கிற ஆசிட் பூச்சி பரவல் வடகிழக்கு மாநிலங்களில் பீதியை ஏற்படுத்திய நிலையில், கொல்கத்தாவில் ஸ்க்ரப் டைபஸ் என்னும் ஒருவகை நோய் தாக்குதல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து நிலைமையைக் கையாள்வதில் சுகாதாரத் துறை தீவிரமாக உள்ளது. மாநிலத்தில் உள்ள 44 ஆய்வகங்களுக்கு சிறப்பு கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. பார்க் சர்க்கஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைல்ட் ஹெல்த் தகவலின்படி, கடந்த 3 வாரங்களில் 10 குழந்தைகள் ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்க்ரப் டைபஸ் ஒரு சிறப்பு வகை பூச்சிகள் கடித்தால் பரவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நேரத்தில்தான் நோய்த் தொற்றும் அதிகம் ஏற்படுகிறது.






ஏடிஸ் கொசு கடித்தால் டெங்கு வருவதைப் போல, த்ரோம்போசைட்டோபெனிக் மைட்ஸ் என்ற ஒரு வகை பூச்சி உடலில் நுழைந்து ஸ்க்ரப் டைபஸ் பாக்டீரியாவை உண்டாக்குகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். நோயின் அறிகுறிகள் சரியாக டெங்குவைப் போலவே இருக்கும். டெங்கு, ஸ்க்ரப் டைபஸ் மற்றும் கொரோனாவின் முதன்மை அறிகுறிகள் காய்ச்சல். இந்த அடிப்படையில் மருத்துவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்துகிறார்கள். காய்ச்சல் ஏற்பட்டால் பாராசிட்டமால் எடுக்கக் காத்திருக்க வேண்டாம் என்கிறார்கள் அவர்கள். நோய் அறிகுறிகள் தென்பட்டால் விரைவில் மருத்துவரிடம் செல்ல வேண்டியது அவசியம். ஸ்க்ரப் டைபஸ் தொடக்கத்திலேயே கண்டுபிடித்தால் விரைவில் குணப்படுத்த முடியும். இல்லையெனில், நோயறிதல் தாமதமானால் ஸ்க்ரப் டைபஸ் உயிருக்கே ஆபத்தானது.


4-6 நாட்களுக்கு குளிர் அல்லது வெப்பம் இல்லாமல் காய்ச்சல் தொடர்ந்தால் அதனை அலட்சியமாக விட்டுவிடாதீர்கள். மேலும், மருத்துவர்களின் கூற்றுப்படி, நோய் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டால், ஆண்டிபயாடிக்குகளை வழங்குவதன் மூலம் விரைவில் குணப்படுத்த முடியும். இல்லையெனில், பல உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்து மரணம் நிகழலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்..