SBI வங்கியில் அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சேவைக் கட்டணத்தை அதிகரித்துள்ளது. இந்தக் கட்டணங்கள் வருகின்ற அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இனி குறிப்பிட்ட வரம்புக்கு மேல் பரிவர்த்தனை செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
savinga account, பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட்ம் தனித் தனி என்பதை வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ரெகுலர் சேவிங்ஸ் அக்கவுண்ட் என்று சொல்லப்படுகிற சாதாரண சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டு. இந்தத் தொகை ஒவ்வொரு வங்கியையும் பொறுத்து மாறுபடும். உதாரணமாக ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை கணக்கு வைத்திருக்கும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளைப் பொறுத்து மாறுபடும். ரெகுலர் சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எவ்வளவு பரிவர்த்தனை வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு செக் புக் வசதி, ATM வசதி என பல வசதிகள் கிடைக்கிறது.
அதேபோல நீங்கள் ஒரே வங்கியில் இரண்டுக்கும் மேற்பட்ட சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருக்கலாம். ஆனால் பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் (Basic Savings Bank Deposit - BSBD) என்று சொல்லப்படுகிற அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இனி ஒவ்வொரு மாதமும் நான்கு முறை இலவசமாக பணப்பரிவர்த்தனை செய்யலாம். நான்கு முறைக்கும் மேல் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது. இந்தக் கணக்கு ஜீரோ பேலன்ஸ் கணக்காகும். இதற்கு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இந்த கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தான் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதற்கு முன்னர் வரை SBI அதன் வாடிக்கையாளர்களுக்கு 4 முறைக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்யும் போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு இலவச வரம்பை வழங்கி இருந்தது. ஆனால் அக்டோபர் 1 முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் சேர்த்து 4 முறை மட்டுமே பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். எஸ்பிஐ மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பது, வங்கி கிளையின் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது மற்றும் பிற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அனைத்தும் இந்த இலவச வரம்பிற்குள் கணக்கிடப்படும். இவை எல்லாம் சேர்த்து 4 முறை இலவசமாக பணப்பரிவர்த்தனை செய்யலாம். அதை தாண்டும் பட்சத்தில் ரூ.15 சேவை கட்டணம் பொருந்தும்.
முன்பே பார்த்தது போல் இது ஒரு ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட். மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க விரும்பாதவர்கள் இந்த கணக்கை தொடங்கலாம். ஆனால் சாதாரண சேமிப்பு கணக்கிற்கு என்னென்ன வசதிகள் கிடைக்கிறதோ? அத்தனை வசதிகளும் இதற்கும் கிடைக்கும். ஆனால் இதற்கு செக் புக் பெற முடியாது. மற்றபடி ஏடிஎம் கார்டு, இதர டிஜிட்டல் பேமென்ட் வசதி ஆகியவை எல்லாம் கிடைக்கிறது. ஒருவேளை BSBD அக்கவுண்ட் வைத்திருப்பவர்களின் கணக்கு முடக்கப்பட்டாலும் அதை மீண்டும் செயல்படுத்துவதற்கும் எந்த கட்டணமும் விதிக்கப்படுவதில்லை. ஏற்கனவே எஸ்பிஐ பேங்கில் சாதாரண சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களால் பிஎஸ்பிடி கணக்கு தொடங்க முடியாது. ஒருவேளை நீங்கள் புதிதாக BSBD கணக்கு தொடங்க நினைத்தால் உங்களுடைய பழைய சேமிப்பு கணக்கை 30 நாட்களுக்குள் மூட வேண்டும்.