சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க துவங்கி உள்ளது. இதனால் பதினெட்டாம் படி ஏறுவதற்கே பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பக்தர்களுக்கு மிக முக்கியமான வேண்டுகோள் ஒன்றை தேவசம் போர்டும், வனத்துறையினரும் விடுத்துள்ளனர். பக்தர்கள் இவற்றை கவனத்தில் கொண்டு, தங்களின் சபரிமலை பயணத்தை தொடர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Continues below advertisement

சபரிமலை மண்டல, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் பாரம்பரிய காட்டுப்பாதையான பெரிய பாதை வழியாக சபரிமலை சன்னிதானத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து அதிகரித்து வருகிறது. இதனால் பாதுகாப்பு பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட பலர் இந்த பாதையை அதிகம் பயன்படுத்துவதால், அவசர மருத்துவ உதவி வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. வனப்பாதுகாவலகர்கள், தீயணைப்புப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) ஆகியோர் தற்போது இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று  73,679 பேர் சாமி தரிசனம் செய்திருந்தனர். இவர்களில் 11,000 க்கும் அதிகமான பக்தர்கள் ஸ்பாட்புக்கிங் மூலம் வந்தவர்.

Continues below advertisement

உடல் நலப்பிரச்சினைகள் உள்ளவர்கள், நடக்க சிரமப்படுபவர்கள், முதியோர்கள், சிறிய குழந்தைகளுடன் வருபவர்கள் பாரம்பரிய காட்டுப் பாதையை தவிர்த்து பம்பை வழியாக சன்னிதானத்தை அடைய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பாரம்பரிய காட்டு பாதையில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்களை அனுமதிக்கப்படுகிறார்கள். மாலை 6 மணிக்குள் பக்தர்கள் சன்னிதானத்தை அடைய வேண்டும். இரவிற்குள் பக்தர்களை சன்னிதானத்திற்கு அழைத்துச் செல்ல வனத்துறை அதிகாரிகள் உடன் செல்ல வேண்டியிருக்கும். இரவு கடைசி ரோந்துப் பணியை முடித்து, சோதனைச் சாவடியில் இருந்து அனுப்பப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கையையும் டோக்கன் எண்களையும் சரிபார்த்த பிறகு, யாரும் பாதையில் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னரே அதிகாரிகள் பணியை முடிப்பார்கள்.

சத்திரம்-புல்லுமேடு பாதைக்கும் இதே நிபந்தனைகள் பொருந்தும். சன்னிதானம் தேவசம் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பான தரிசனத்தை உறுதி செய்யவும், விர்சுவல் க்யூவில் முன்பதிவு செய்த நாட்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்டல விளக்கு திருவிழா தொடர்பான கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இரவு நேரங்களில் இந்த சாலைகளில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால், இந்த வழிகளில் ஓய்வெடுப்பது விபத்துக்களுக்கு வழிவகுக்கும். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அடங்கிய யாத்திரைக் குழுக்கள் ஆபத்தான இதுபோன்ற பாதைகளில் ஓய்வெடுப்பது பெரிய பாதுகாப்புச் சிக்கல்களை உருவாக்கும். எனவே, வாகனங்கள் செல்லும் வழிகளில் இருந்து விலகி பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கு பக்தர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வனப்பகுதியில் அமைந்துள்ள கோவிலான சபரிமலையின் புனிதத்தைப் பாதுகாக்க பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை வனத்திலோ அல்லது நடைபாதைகளிலோ வீசாமல், சபரிமலையை புனிதமாக வைத்திருக்க ஐயப்ப பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.