சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல மகரவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், இயலோதோர் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் பாரம்பரிய கானக பாதைகளிலும், பம்பையில் இருந்து  7 கிலோ மீட்டர் தூரம் மலையேறும் போதும் உடல் ரீதியாக பெரும் சிக்கல்களை சந்திக்கின்றனர்.

Continues below advertisement

இது போன்ற பக்தர்களுக்கு உதவுவதற்காக தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 68 பேர் கொண்ட குழுவினர் ஸ்ட்ரெச்சர்களுடன் சபரிமலையில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் சபரிமலை செல்லும் வழியில் நடக்க இயலாமல் சோர்வாக உள்ள பக்தர்களை சன்னிதானம் கொண்டு செல்வது, முதுமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்படுபவர்களை மருத்துவ முகாம்களில் சேர்ப்பது என கட்டணமில்லா சேவையை வழங்கி வருகின்றனர். இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவரும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் நிலையில், ஐயப்ப பக்தர்களுக்கு சேவை செய்வதற்காகவே விடுப்பு எடுத்து கட்டணமில்லா சேவையை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

Continues below advertisement

குறிப்பாக நேற்று சபரிமலையில் பதினெட்டு படியேறி ஐயப்பனை தரிசித்தார் 102 வய்து மூதாட்டி. கேரள மாநிலம் , வயநாடு , மீனங்காடி பகுதியைச் சேர்ந்த பாருக்குட்டி , 2023 - ல் 100வது வயதை கொண்டாடினார் . அப்போது அவருடைய பேரன்களில் ஒருவர் சபரிமலைக்கு அழைத்துள்ளார் . வாழ்வில் ஒருமுறை கூட சபரிமலை போகாத இவர் , பேரனின் அழைப்பை ஏற்றுக்கொண்டு மாலையிட்டு விரதமிருந்து முதல் முறையாக சபரிமலை சென்றார்.

கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக வந்த பாருக்குட்டி , இந்தாண்டு மூன்றாவது முறையாக ஐயப்பனை தரிசிக்க நேற்று சபரிமலை வந்தார் . பேரன்கள் மற்றும் உறவினர்கள் உட்பட பன்னிரண்டு பேர் அவர் வந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.நூற்று இரண்டு வயதில் ஏற்பட்டுள்ள உடல் தளர்ச்சியால் இவர் , பம்பையில் இருந்து டோலியில் வந்தார் . பின் , அங்கு பணியில் உள்ள போலீசாரின் உதவியுடன் பதினெட்டு படிகள் ஏறி , அய்யப்பனை தரிசனம் செய்தார் . இது ஒரு மகா பாக்கியம் என்று அவர் கூறினார். மூதாட்டி பாருக்குட்டியுடன் செல்பி எடுப்பதில் பக்தர்கள் ஆர்வம் காட்டினர் . கேரள மாநிலம் ஏற்றுமானுாரைச் சேர்ந்த தேஜஸ் இயக்கிய , ருத்திரன்றே நீராட்டு என்ற மலையாள திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் போதைப் பொருட்களுக்கு எதிரான முக்கிய தகவலை சொல்பவராக பாருக்குட்டி நடித்துள்ளார்.