ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா தனது 95வது வயதில் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார்.






அவரது மறைவிற்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பான பதிவில், “ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் ஆகியவற்றின் மதிப்பிற்குரிய தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா ஜி மகராஜ், ஆன்மீகம் மற்றும் சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். எண்ணற்ற இதயங்களிலும் மனங்களிலும் அழியாத தடம் பதித்தவர். அவரது இரக்கமும் ஞானமும் தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். பல வருடங்களாக அவருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. 2020 இல் பேலூர் மடத்திற்கு நான் அவருடன் உரையாடியதை நினைவு இந்த இடத்தில் நினைவுக்கூறுகிறேன். சில வாரங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் மருத்துவமனைக்குச் அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தேன். எனது எண்ணங்கள் பேலூர் மடத்தின் எண்ணற்ற பக்தர்களிடம் உள்ளன. ஓம் சாந்தி” என குறிப்பிட்டுள்ளார்.  


சுவாமி ஸ்மரானந்தா 2017 ஆம் ஆண்டில் ராமகிருஷ்ணா மிஷனின் 16 வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷனின் மிகவும் மதிப்பிற்குரிய தலைவர் மகராஜ், ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தாஜி இரவு 8.14 மணிக்கு மகாசமாதி அடைந்தார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.


சுவாமி ஸ்மரணானந்தா, ஏற்கனவே சிறுநீர் பாதை நோய்த்தொற்றுடன் ஜனவரி 29 அன்று ராமகிருஷ்ணா மிஷன் சேவா பிரதிஷ்டானில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மூச்சுக்குழாய் பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு மார்ச் 3 ஆம் தேதி முதல் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.