பெட்ரோல்/டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையில் மேலும் உயர்வு ஏற்பட்டுள்ளது நேர்மையான மக்களுக்கு வேதனையாக இருக்கும். இது நாட்டின் பொருட்களுக்கான தேவையை பலவீனமாக்குவதுடன், பொருளாதார மீட்சியை மேலும் சிக்கலாக்கி விடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். 


 






இந்த போக்கிற்கு, நீங்களும் தான் உடந்தையாக உள்ளீர்கள் என்பதை உணரவில்லையா? என்று ட்விட்டர் பயணர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், " நான் முதலில் இந்தியராக உணர்கிறேன்" என்று பதிவிட்டார். 


சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில் வரலாற்று காணாத அளவு பெட்ரோல்/டீசல் விலை உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசு அதிகரித்து ரூ. 100.75க்கு விற்பனையாகிறது. அதே போன்று டீசல் விலை 0.33 காசு அதிகரித்து ரூ.  96.26க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் விலையின் இந்து உயர்வு போக்குக்கு பல்வேறு தரப்பினரும் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். 










அதிலும், குறிப்பாக பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர்  சுப்ரமணிய சுவாமி தொடர்ச்சியாக கடும் விமர்சனங்களை  பதிவிட்டு வருகிறார். கடந்தண்டு டிசம்பர் மாதம் தனது ட்விட்டரில் சில தொடர்ச்சியான பதிவிகளை வெளியிட்டார்.  


ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாய் என்பது இந்திய அரசின்  மகத்தான சுரண்டல். கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களால் 30 ருபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கப்படுகிறது. அரசு விதித்த அதிகப்படியான வரி மற்றும் பெட்ரோல் பம்ப் டீலர்களுக்கான கமிஷன் காரணமாக 60 ரூபாய் கூடுதலாக  விற்கப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.40க்கு விற்கப்பட வேண்டும்" என்று கூறினார். 


 


 


ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் பெட்ரோல்/டீசல் பொருட்களை கொண்டு வரலாமா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், " பேப்பர்வொர்க் அதிகம் தேவைப்படும். ஒரு லிட்டர் பெட்ரோல் 30 ரூபாய் என்று நேரடியாக விலை குறைப்பு செய்து விடலாமே என்று தெரிவித்தார். இதனால், அரசுக்கு 10 லட்சம் கோடி ஆண்டு வருவாய் இழப்பு ஏற்படும் என்ற கருத்துக்குப் பதிலளித்த அவர், "வரவு செலவு கணக்கு பார்க்க நாம் ஒன்றும் கடைக்கார்கள் இல்லை" என்று தெரிவித்தார்.   


இந்தாண்டு மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாள், சுப்ரமணிய சுவாமி தனது ட்விட்டரில், "   இராமனின் இந்தியாவில் பெட்ரோல் விலை 93 ரூபாய், சீதையின் நேபாளத்தில் 53 ரூபாய், இராவணனின் இலங்கையில் 51 ரூபாய்"  எனக் காட்டமாக பதிவிட்டார். 


 






கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை கடுமையாக உயர்த்தி வருகிறது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 9.48-ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி, 2021 மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 32.9-ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை 216 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து வரி பங்கானது மற்ற மாநிலங்களைவிட குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும், வாசிக்க:


GST Compensation: மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பீடு; ரூ.40,000 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு!