ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் 4.2 என்ற ரிக்டர் அளவில் நள்ளிரவு 2.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நிலத்தின் அடியில் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. 






நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவில் 4.2 ஆக இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் ட்வீட் செய்துள்ளது. 


அருணாச்சல பிரதேசத்திலும் நில அதிர்வு:


அதே இரவில் அருணாச்சலபிரதேசத்தின் சாங்லாங்கில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல், நேற்று மியான்மரில்  4.0 என்ற ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் தாக்கியதாக தெரிகிறது. இந்த நிலநடுக்கமானது மியான்மரில் பர்மாவிலிருந்து 10 கி.மீ. மற்றும் 106 கி.மீ. வடக்கே ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. 


கடந்த வெள்ளிக்கிழமை சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காலை இரண்டு வலுவாக நிலநடுக்கம் உணரப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் குவாலியர் அருகே காலை 10:31 மணிக்கு 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் அருகே 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் காலை 10:28 மணிக்கு ஏற்பட்டது என்றும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.