இரவு நேர ஆஸ்ட்ரோ சுற்றுலா இந்தியாவில் முதன் முதலாக ராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 


என்னதான் பகல் நேரங்களில் சூரியன் சுட்டெரித்தாலும் இரவு நேரங்களில் நிலா, நட்சத்திரம் என அழகான வானத்தை காண யாருக்கு தான் ஆர்வமிருக்காது. அதுவும் வானில் நிகழும் அதிசயங்களை காண கோளரங்களில் முட்டிமோதும் மக்கள் கூட்டத்தை கொண்டே இதுபோன்ற நிகழ்வுகளில் மக்களுக்கு எவ்வளவு நாட்டம் உள்ளது என்பதை அறியலாம். 






பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மக்கள் இயற்கையை ரசிக்க அதிக ஆர்வம் காட்டுவதால் சமீபகாலமாக ஆஸ்ட்ரோ சுற்றுலா பிரபலமடைந்து வருகிறது.  ஆஸ்ட்ரோ சுற்றுலா என்பது இரவு நேரம் வானத்தைப் பார்ப்பது அல்லது வானியல் தொடர்பான கண்காணிப்பு நிலையங்கள் அமைப்பது போன்ற வசதிகளை உள்ளடக்கியதாகும். இதுதொடர்பாக ராஜஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலர் முக்தா சின்ஹா ​​கூறுகையில் கொரோனா காரணமாக ஊரடங்கில் வீட்டுக்குள் முடங்கியிருந்த மக்களுக்கு வானியல் நிகழ்வுகளை காண்பதில் அதிக ஆர்வம் காட்டினர். 






ஊரடங்கு தளர்வில் மக்கள் 2021 ஆம் ஆண்டு நட்சத்திரங்களை பார்வையிடும் நிகழ்வுக்கு ராஜஸ்தான் அரசு ஏற்பாடு செய்திருந்தது. இது பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ராஜஸ்தான் முழுவதும் இரவு நேர ஆஸ்ட்ரோ சுற்றுலாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் பரிந்துரைகள்  ஏற்ற ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலோட் மாநிலத்தின் 33 மாவட்டங்களிலும் இரவு நேர ஆஸ்ட்ரோ சுற்றுலாவை அறிமுகப்படுத்துவதாக முதல்வர் அறிவித்தார்.


ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரில் நட்சத்திரம் பார்ப்பதற்கு ஜந்தர் மந்தர், ஆம்பர் கோட்டை, மகாராஜா பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர் கலா கேந்திரா ஆகிய இடங்கள் உள்ளது. இதேபோல் சமீபத்தில் லடாக்கில் உள்ள ஹான்லேயில் இந்தியாவின் முதல் டார்க் ஸ்கை ரிசர்வ் அமைப்பதற்காக இந்திய வானியல் நிறுவனம், லடாக் நிர்வாகம் மற்றும் லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் ஆகியவற்றுக்கு இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண