காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜடோ நியாய யாத்திரையில் பிஹார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றார். 


ராகுல் காந்தி தலைமையில் பாரத் ஜடோ நியாய யாத்திரை கடந்த 14ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது.  மேகாலயா, ஜார்கண்ட்.அஸ்ஸாம், மேற்கு வங்கம் என பல்வேறு மாநிலங்களை அடுத்து பிஹாரில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள  சசரம் (Sasaram) பகுதியிலிருந்து தொடங்கிய பயணத்தில் ராஷ்டிரிய ஜனதா தள (Rashtriya Janata Dal) தலைவர் தேஜஸ்வி யாதவ் ராகுல் காந்தியுடன் இணைந்துள்ளார். 


சிகப்பு நிற காரில் ராகுல் காந்தியுடன் தேஜஸ்வி கார் ஓட்டிச்செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 


நிதிஷ் குமார், பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், பிஹாரில் ராகுல் காந்தியின் பயணம் பெரிது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று மதியம் 2.30 மணிக்கு  கைமூரில் (Kaimur) நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தியும் தேஜஸ்வியும் உரையாற்ற உள்ளனர்.






I.N.D.I.A. கூட்டணியிலிருந்து பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வெளிய பிறகு,தேஜஸ்வி யாதவ் ராகுல் காந்தியுடன் இணைந்து பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் இது. 


 ராகுல் காந்தியில் நியாய யாத்திரை பிகாரை அடுத்து இன்று மாலை உத்தர பிரதேசத்தின் சண்டெளலி (Chandauli) பகுதியை அடைகிறது. அங்கு நடைபெறும் பயணத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர், எம்.பி. பிரியங்கா காந்தி பங்கேற்கிறார்.


 கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி  தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து, ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினார். பல்வேறு மாநிலங்கள் வழியிலான இந்த பயணம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி அன்று ஜம்மு-காஷ்மீரில் முடிவடைந்தது.


பாரத் ஜடோ நியாய யாத்திரை


ராகுல் காந்தி  பாரத் நியாய யாத்திரை என்ற பெயரில் தனது இரண்டாவது கட்ட நடைபயணத்தை தொடங்கியுள்ளார். மணிப்பூரில் தொடங்கிய இந்த பயணம் மும்பையில் முடிவடைய உள்ளது.