மத்தியப் பிரதேசம், ரத்லம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள் ராகிங் செய்யப்படுவது குறித்த வீடியோ வெளியாகி ட்ரெண்ட் ஆகி உள்ளது.
முன்னதாக அக்கல்லூரியின் சில மாணவர்களால் ரகசியமாக படமாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ இன்று (ஜூலை.30) வெளிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தலை குனிந்தபடி நிற்கும் எட்டுக்கும் மேற்பட்ட ஜூனியர் மாணவர்களை, மூத்த மாணவர்கள் வரிசையாக நிற்க வைத்து அறையும் இந்த வீடியோ இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே முன்னதாக தனியார் பத்திரிகை ஒன்றுக்கு இச்சம்பவம் குறித்து பதிலளித்த ரத்லாம் மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் ஜிதேந்திர குமார் குப்தா, இந்த விஷயம் குறித்து தாங்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளதாகவும், ராகிங் எதிர்ப்புக் குழுவை விசாரித்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தாங்கள் தெரிவித்துள்ளதாகவும் பேசியுள்ளார்.
ராகிங் நடவடிக்கைகள் பற்றி வியாழன் இரவு ஓரளவு தெரிந்து கொண்டோம், நேற்று வெள்ளிக்கிழமை காலை ராகிங் தடுப்புக் குழுவைக் கூட்டியதைத் தொடர்ந்து முழுத் தகவல் கிடைத்தது,'' என்றார் குப்தா.
மேலும் சம்பந்தப்பட்ட மாணவர்களை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள ஜிதேந்திர குமார், "2021 பேட்ச் மாணவர்களிடம் 2020 பேட்ச் மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டுள்ளனர். 10 பெயர்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன, நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், விரைவில் கடுமையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதேபோல் மத்தியப் பிரதேசம், இந்தூரில் உள்ள மாநிலத்தின் மிகப்பெரிய மருத்துவக் கல்லூரியான மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் பெயர் தெரிவிக்க விரும்பாத மாணவர்களின் புகாரின் பேரில், கல்லூரியில் நடக்கும் ராகிங் பற்றி தெரியவந்தது.
மூத்த எம்பிபிஎஸ் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை தலையணையுடன் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தியதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மூத்த எம்.பி.பி.எஸ் மாணவர்கள் இதில் பெண் மாணவர்களையும் பங்கெடுக்க வற்புறுத்தியதாகவும், அவர்களுக்கு எதிராக மோசமான கருத்துகளைத் தெரிவித்ததாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டிய நிலையில், இதுகுறித்து முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: Friendship Day 2022 Wishes: உலகப்போரால் உருவான நண்பர்கள் தினம்! தோள் கொடுக்கும் தோழமைக்காக ஒருநாள்! வரலாறு இதுதான்!
உலகை மிரள வைத்த இலங்கை போராட்டம்...முடிவுக்கு கொண்டு வர துடிக்கும் ஆளும் வர்க்கம்...பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்