குற்றப்பிறிவு பெண் இன்ஸ்பெக்டர் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை அன்று பணிக்கு செல்லாததால், அவருடன் பணியில் ஈடுபடும் சக காவலர்கள் ஷில்பாவை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் ஷில்பா தொலைபேசியை எடுக்காததால், சக காவர்கள் விஷ்ராந்தவாடியின் சாந்திநகர் பகுதியில் உள்ள பெண் இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது தூக்கில் தொங்கியபடி ஒரு உடல் இருப்பதை கண்டு அது இன்ஸ்பெக்டர் ஷில்பா சவான் என உறுதி செய்தனர்.


“இன்ஸ்பெக்டர் ஷில்பா அவரது வீட்டு ஃபேனில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்ததால் அதை தற்கொலை என எடுத்துக்கொள்ள முடியாது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான ஆதாரமும் இல்லை. வீட்டில் அவரது மகன் உடன் வசித்து வந்தார். தற்போது காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஷில்பா மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளோம். அவரது மரணத்திற்கான காரணத்தை அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது”என விஷ்ராந்த வாடி போலீசார் தெரிவித்துள்ளனர்.



சில வருடங்களுக்கு முன் இன்ஸ்பெக்டர் ஷில்பா புனேவுக்கு மாற்றப்பட்டார். தற்போது புனே போலீஸ் கமிஷனராக இருக்கும் அமிதாப் குப்தா, “இன்ஸ்பெக்டர் மரணம் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்”.


“காவல்துறையில் பணிச்சுமை உள்பட பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்ளும் காவலர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. காவல்துறையில் நல்ல பெயரை பெற்றவர்கள் கூட தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்கள் கைகளில் ஆயுதங்கள் இருப்பதால் அவசர முடிவவை எடுத்துக் கொள்கின்றனர். காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு வாரம் ஒருமுறை விடுப்பு என்பது எப்போதுமே உள்ளது. ஆனால் அதனை சரிவர பெற முடியாததால் சிக்கல்கள் உள்ளன. காவல்துறையினர் 24 மணி நேரமும் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் வந்தால், அடுத்த நாள் ஓய்வு எடுக்கச் செல்லலாம். காவலர்களுக்கு அவ்வப்போது அதிகாரிகளும் ஓய்வு அளிக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க முடியும்.


அண்மைக்காலமாக, தற்கொலைகள் அதிகமாக நடக்கின்றன. இதற்குக் காரணம், மக்கள் தொகைப் பெருக்கத்தை ஈடுசெய்யக் கூடிய அளவுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பது, விலைவாசி உயர்வுக்கு ஏற்றது போல வாழ்க்கை நடத்த முடியாமல் இருப்பதாகும். நீண்டகாலமாக நீடித்திருக்கும் பிரச்னைக்குத் தற்காலிக தீர்வாக தற்கொலை செய்து கொள்கின்றனர். உளவியல்ரீதியாக தற்கொலை செய்பவர்களும் உள்ளனர். அனைத்து தற்கொலைகளும் திட்டமிடப்பட்டதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சில நொடிகளில் திடீரென முடிவு எடுத்து விடுவார்கள். அவ்வாறு முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பவர்கள், ஒரு குறுஞ்செய்தி அனுப்பி முன்கூட்டியே உணர்த்தி தற்கொலை செய்து கொள்கின்றனர்” என்று பல காவல்துறை அதிகாரிகள் காவலர்கள் தற்கொலை குறித்து தெளிவாக தெரிவித்துள்ளனர்.