புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தகவல்.
வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், பெருபாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் 24-ம் தேதி வரை தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
இந்நிலையில், புதுச்சேரி மற்றும் கதலைக்கால் பகுதிகளுக்கு இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது. அதோடு, புதுச்சேரியில் நாளை அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்டும், காரைக்காலில் நாளை கனமழைக்கான ஆரஞ்சு அலெட்டும் விடுக்கப்பட்டது.
இந்த அதிகனமழை மற்றும் கனமழைக்கான எச்சரிக்கையின் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் கள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை(22.10.25) விடுமுறை அளித்து, புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
உதவி எண்கள் அறிவிப்பு
புதுச்சேரியில் பேரிடர் தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பொதுமக்கள் 1077, 1070, 112 (அ) 9488981070 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.